நவராத்திரி தாம்பூலத்தில் என்ன பொருட்களை வைக்க வேண்டும்
நாளை நவராத்திரி ஆரம்பம் ஆகிறது.பலரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு செய்வார்கள்.மேலும் நவராத்திரி பூஜை ஆனது இரவு தான் நடக்கும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜைகள் நடைபெறும்.அப்பொழுது உற்றார் உறவினர்களை அழைப்பது வழக்கம்.
அந்த வகையில் வருகின்ற அன்பர்களுக்கு கட்டாயம் நம்மால் முடிந்த சிலவற்றை தாம்பூலத்தில் வைத்து கொடுக்கவேண்டும்.அப்படியாக அந்த தாம்பூலத்தில் என்ன பொருட்களை வைக்க வேண்டும்?அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
1. வெற்றிலை
2. பாக்கு
3. மஞ்சள், குங்குமம்,
4. சீப்பு
5. முகம் பார்க்கும் கண்ணாடி
6. வளையல்
7. மஞ்சள் கயிறு
8. தேங்காய்
9. பழம்
10. பூ
11. மருதாணி
12.கண் மை
13. தட்சணை
14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள் குங்குமம் மற்றும் மஞ்சள்கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. சீப்பு கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக வழங்கப்படுகிறது.
கண்ணாடி கணவனின் ஆரோக்கியம் காக்க வழங்கப்படுகிறது. வளையல் வீட்டில் மன அமைதி பெற உதவுகிறது. தேங்காய் பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்ததேங்காய் கொடுப்பதே நல்லது.)
பழம் கொடுப்பதால் அன்னதானப் பலன் கிடைக்கிறது. பூ மகிழ்ச்சி உண்டாக்குகிறது. மருதாணி நோய் வராமல் தடுக்கிறது. கண்மை திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க வழங்கப்படுகிறது. தட்சணை லக்ஷ்மி கடாக்ஷம் பெருக கொடுக்கப்படுகிறது. ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய வழங்குகிறோம்.
மனிதர்களிடையே பிறர்க்கு பகிர்ந்து கொள்ளும் வழக்கம் வரவே இந்த மாதிரியான சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. முடிந்தவர்கள் இந்த முறையில் தாம்பூலம் வழங்கலாம் முடியாதவர்கள் தங்களால் இயன்ற பொருட்களை தாம்பூலத்தில் வைத்து கொடுக்க அந்த முப்பெருந்தேய்வியின் பரிபூர்ண அருளை பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |