குலதெய்வத்தின் அருள் கிடைக்க மஹாளய அமாவாசை அன்று செய்யவேண்டிய பரிகாரம்
நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்கள் மனம் குளிர வைத்து அவர்களின் பரிபூர்ண அருளை பெறுவது தான் புரட்டாசி அமாவாசை. இதை மஹாளய அமாவாசை என்றும் சொல்லுவார்கள்.இந்த நாளில் நம்முடைய முன்னோர்களின் அருளை பெறுவதோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
பொதுவாக நாம் நம்முடைய குலதெய்வ வழிபாட்டை பௌர்ணமி அமாவாசை தினங்களில் மேற்கொள்வது வழக்கம்.அன்றைய நாளில் சிலபரிகாரங்கள் செய்து குலதெய்வத்தை வழிபாடு செய்ய நாம் குலதெய்வத்தின் முழு அருளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
அப்படியாக அந்த பௌர்ணமி நாள் போல் அமாவாசையில் சிறப்பு மிகுந்ததாக திகழக்கூடிய இந்த புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய பரிகாரத்திற்கு அதிக அளவில் பலன் கிடைக்கிறது.
அதாவது ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை வைக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் ஒரே ஒரு விரலி மஞ்சள் வைக்க வேண்டும்.
பிறகு வீட்டில் தங்கம் அல்லது வெள்ளி எது இருக்கிறதோ இவை இரண்டில் ஏதாவது ஒன்றையாவது அதனுடன் சேர்த்து வைக்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் தாமரை மணிமாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை அல்லது ருத்ராட்சம் என்று ஜெபத்திற்கு உபயோகப்படுத்தக்கூடிய எந்த மாலையாக இருந்தாலும் அந்த மாலையையும் அதில் வைத்து மூட்டையாக கட்டி குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.
குலதெய்வம் தெரியாது என்பவர்கள் அவர்களுடைய இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் வைத்து விட வேண்டும். பிறகு விளக்கேற்றி வழக்கம் போல் சுவாமி கும்பிட்டு மூட்டையை எடுத்து இதில் இருக்கக்கூடிய பச்சரிசியை அரிசி பாத்திரத்தில் சேர்த்து விட வேண்டும். ஒரு ரூபாயையும் தங்கத்தையும் தங்கம் வெள்ளி வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
ஜெபமாலையை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அந்த மஞ்சள் துணியிலேயே மீதம் இருக்கும் விரலி மஞ்சளை கட்டி வீட்டின் நிலை வாசலில் கட்டிவிட வேண்டும். அடுத்த அமாவாசை தினத்தன்று இந்த விரலி மஞ்சளை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளும் இஷ்ட தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெறும். மேலும் வீட்டில பொருளாதார முன்னேற்றம் தடைகள் இவை யாவும் விலகி விடும்.
வீட்டில் ஏதேனும் தீய சக்திகள் இருந்தாலும் அது விலகி நேர்மறை ஆற்றல் பெருகும்.இந்த சிறிய பரிகாரத்தை முழுமனத்தோடும் நம்பிக்கையோடும் அதற்கான குறிப்பிட்ட நாளில் செய்யும் பொழுது அதற்கான பலன் நிச்சயம் கிடைத்து வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |