ஆண் இல்லாத வீட்டில் பெண் தர்ப்பணம் செய்யலாமா?

By Sakthi Raj Oct 02, 2024 05:30 AM GMT
Report

பொதுவாக தர்ப்பணம் என்றால் ஆண்கள் தான் கொடுப்பார்கள்.அப்படியாக ஆண்கள் இல்லாத வீட்டில் பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால் அவர்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?அதை பற்றி பார்ப்போம். நம்முடைய வீட்டில் இறந்தவர்களுக்காக செய்யும் காரியம் தான் தர்ப்பணம். அது ஒரு புண்ணிய காரியம்.

அதாவது சூரியன், வருணன், அக்கினி எல்லா தேவர்களும் நீர்நிலைகளில் நின்று தண்ணீரை இரண்டு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொண்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா?

ஆண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா?


அதாவது தேவர்களுக்கு நீரை சமர்ப்பணம் செய்து அதன்மூலம் ஆசீர்வாதத்தை பெறுவது ஆகும். இந்த தர்ப்பணம் அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இறந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டிய தினம் ‘அம்மாவாசை, இறந்தவர்களின் திதி அன்று’ இந்த இரண்டு தினங்கள் மட்டுமே.

ஆண் இல்லாத வீட்டில் பெண் தர்ப்பணம் செய்யலாமா? | Amavasai Tharpanam Seiyum Murai

அதையும் கட்டாயமாக ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். இதைதான் தர்பணம் என்று சொல்லுவார்கள். ஒருவர் வீட்டில் மகன் இல்லாத பொது பெண்கள் தர்ப்பணம் செய்யலாமா என்றால்,சாஸ்திரத்தில் பெண்கள் செய்யலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது ராமாயணத்தில் தசரதன் இறந்தபோது, ​​ராமன் இல்லாத நேரத்தில் சீதை அவனுடைய பிண்டனை செய்தாள். பல சாஸ்திரங்களின்படி, பெண்கள் எள்ளும் தண்ணீரும் இரைந்து தர்ப்பணம் செய்யக்கூடாது என்று எந்த வேதமும் இல்லை.

ஆண் இல்லாத வீட்டில் பெண் தர்ப்பணம் செய்யலாமா? | Amavasai Tharpanam Seiyum Murai

மகாபாரதத்திலும் பெண்கள் தர்ப்பணம் செய்வதைக் காணலாம். இறந்தவர் திருமணமாகாதவராக இருந்தாலும், அவரது தாயும் சகோதரியும் கூட தர்ப்பணம் செய்யலாம். இறந்தவர்களது ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், தர்ப்பணத்தை முறையாக செய்யப்படுவது அவசியம்.

இந்த நாளில் கறுப்பு எள், அரிசி உருண்டை செய்து முன்னோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

இந்த வழக்கில் காகம் யமனின் தூதராக கருதப்படுகிறது. காகம் அந்த உணவை சாப்பிட்டால், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.

ஒருவேளை, இந்த சாஸ்திரங்களை முறையாக கடைபிடிக்காமல் விட்டால்தான் பித்ரு தோஷமும், பித்ரு சாபம் ஏற்படும்.ஆக பெண்களும் கட்டாயம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US