ஆண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா?
அம்மன் பண்டிகைகள் எத்தனை வந்தாலும் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்போடு கொண்டாடப்படும் பண்டிகை புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி ஆகும்.சக்தி தெய்விகளை போற்றும் வகையில் மிக சிறப்பான வகையில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இப்பொழுது நவராத்திரி பண்டிகை கொண்டாடும் முறையும் அதன் சிறப்புகளை பற்றி பார்ப்போம். 'நவம்" என்றால் ஒன்பது என்று அர்த்தம்.
முப்பெருந்தேவியரையும் ஒன்று சேரப் போற்றி கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி இருக்கிறது. இந்த நவராத்திரியானது புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் கொண்டாடப்படும் நிகழ்ச்சியாகும்.
ஒவ்வொரு வீடும் ஒரு கோயிலாக கருதப்படுகிறது.அந்த வீட்டை இன்னும் தெய்விகமா மாற்ற நவராத்திரி விழாவில் சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள் வகுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்களில் பலரும் தங்களுடைய வீடுகளில் கொலு படிக்கட்டுகள் அமைத்து பூஜைகள் செய்து உற்றார் உறவினர்களை அழைத்து பிரசாதம் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் இராமர்தான் கொண்டாடியதாக புராணங்கள் கூறுகின்றன. ராமபிரான் நவராத்திரி விரதம் இருந்த பிறகு தான் சீதை இருக்குமிடம் தெரிந்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. விஸ்வாமித்திரர், காளிதாசன், அபிராமிபட்டர், பிரம்மா, பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி விரதமிருந்து பூஜை செய்து அம்பிகையின் அருளை பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இந்த நவராத்திரி நாட்களில், ஒவ்வொரு நாட்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக, பெண் குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும். குழந்தைகள் முதல் மூதாட்டி வரையான பெண்களை அம்பாளாகவே போற்றி வணங்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் முப்பெருந்தேவியரும் நம் இல்லத்தில் வாசம் செய்வார்கள் என்றும், அவர்களின் பரிபூரண ஆசி மற்றும் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணப் பாக்கியமும் , திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.
மேலும்,பலரும் இந்த நவராத்திரி விழாவில் ஆண்கள் விரதம் இருக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும். நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை கண்டிப்பாக ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் பரிபூர்ண அருளை பெறலாம்.
நவராத்திரி விரதம் இருப்பதால் அனைத்து செல்வங்களையும் பெறுவதோடு வாழ்க்கை மிகவும் சுபமாக மாறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |