நியூமராலஜி: இந்த தேதியில் பிறந்தவங்க கணவன்/மனைவிக்கு துரோகம் பண்ண மாட்டார்களாம்
ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நியூமராலஜி
எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் நம்பகமான மற்றும் விசுவாசமான துணையாக இருப்பார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 2, 11, 20 மற்றும் 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உறவில் நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
தங்கள் உறவுகளில் வலுவான அடித்தளங்களை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்கள் துணைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எதையும் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
4,13, 22 மற்றும் 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் விசுவாசமான நபர்களில் ஒருவராக உள்ளனர். துணையின் தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்யத் தயாராக உள்ளனர்.
காதலை ஒருபோதும் விளையாட்டாக பார்க்க மாட்டார்கள். எந்த நிபந்தனையுமின்றி காதலிப்பவராக இருக்கிறார்கள்.
7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் நேர்மையாக இருப்பவர்கள். சமமான, நியாயமான மற்றும் பரஸ்பர மரியாதை நிறைந்த உறவை உருவாக்குபவர்களாக உள்ளனர்.
காதலிக்கும் போதும், காதலிக்கப்படும்போதும் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.