இந்த தேதிகளில் நாம் மறந்தும் திருமணம் செய்யக்கூடாதாம்.. ஏன் தெரியுமா
திருமணம் பந்தம் என்பது மிகவும் புனிதமான பந்தமாகும். அந்த வகையில், நாம் எந்த தேதிகளில் திருமணம் செய்யக்கூடாது? எந்த தேதிகளில் திருமணம் செய்யலாம் என்று ஜோதிட ரீதியாக ஒரு சில கணக்குகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
எண் 1:
இது சூரியனை குறிக்கக்கூடிய எண்ணாகும். மிகவும் சிறந்ததாகும். வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
எண் 2 :
இது சந்திரனை குறிக்கக்கூடிய எண்ணாகும். ஆதலால், இதை தவிர்க்க வேண்டும். காரணம் இது உடல்நிலையில் குறைபாடுகள் மற்றும் குழந்தை பாக்கியத்தை சில தாமதத்தை ஏற்படுத்தலாம்.
எண் 3 :
இது குருவை குறிக்கக்கூடிய எண்ணாகும். இது திருமண வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது. இது இணக்கமான உறவுகளை உறுதி செய்யக் கூடியதாக இருக்கிறது.
எண் 4 :
இது ராகுவை குறிக்கக்கூடிய எண்ணாகும். இது சண்டை மற்றும் நிதி சிக்கல்களை உருவாக்கும்.

எண் 5:
இந்த எண் ஆண் வாரிசு மற்றும் நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு அவ்வளவு உகந்ததான தேதி அல்ல. கவனமாக இருக்க வேண்டும்.
எண் 6:
இது மகாலட்சுமிக்குரிய எண்ணாகும். இது செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது. திருமணத்திற்கு மிக சிறப்பானதாக அமையும்.
எண் 7:
இது ஆன்மீக எண்ணாக கருதப்படுகிறது. இது வாழ்க்கையை விடவும் தனிமையை அதிகமாக தூண்டலாம்.
எண் 8:
சனிபகவானுக்குரிய எண்ணாகும். கடன் மற்றும் தடைகளை இவை உருவாக்கலாம்.
எண் 9:
செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாகவும். இது கோபம் விபத்துக்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
பரிகாரம்:
சில காலகட்டங்களில் நமக்கு நேரம் சரியில்லை என்றாலும் தவறான தேதியில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் இறைவன் தேர்ந்தெடுக்கக்கூடிய தேதியில் தான் நாம் திருமணம் செய்கின்றோம்.
அதை நாம் குறை சொல்ல முடியாது என்றாலும் அதற்குரிய பரிகாரங்கள் செய்தால் நிவர்த்தி அடைய முடியும்.
இவ்வாறான தேதியில் திருமணம் முடிகிறது என்றாலும் நல்ல நாளில் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வது மற்றும் எறும்புகளுக்கு ரவை மற்றும் சர்க்கரை உணவு அளிப்பது சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |