பிடித்தவர்களுக்கு செருப்பை மட்டும் பரிசாக கொடுக்கக்கூடாது.., ஏன் தெரியுமா?
ஷூக்கள், செருப்புகளை பரிசாக கொடுப்பது துரதிர்ஷ்டம் என்று கருதப்படுவதாக ஜோதிடம் சொல்கிறது.
செருப்பு, ஷூ போன்றவற்றை பரிசாக கொடுப்பதால் உறவில் பிரிவை ஏற்படுத்தும்.
ஷூக்களை அணிந்து நடப்பதால், பரிசு வாங்குபவர் உங்களை விட்டு விலகிப் போகலாம் என்பது நம்பிக்கை.
சீன கலாச்சாரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கலாச்சாரங்களிலும் இதே போன்ற நம்பிக்கை உள்ளது.
சிலர் ஷூக்களை பரிசாக வாங்கும் போது, துரதிர்ஷ்டத்தை தவிர்க்க அதற்கு பதிலாக கொஞ்சம் பணம் கொடுக்கிறார்கள்.
காதலர்கள் ஷூக்களை பரிசாக கொடுப்பதால் அவர்கள் உணர்ச்சி ரீதியாக விட்டு விலகி போகலாம் என்று சொல்லப்படுகிறது.
செருப்பை பரிசாக கொடுப்பதால், அதனை கொடுப்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை, பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் உறவில் கருத்து வேறுபாடு ஏற்படுவது மட்டுமல்லாமல் அவர்கள் நிரந்தரமாக பிரியும் சூழல் ஏற்படுகிறது.
இந்த நம்பிக்கை வித்தியாசமாக இருந்தாலும் பலரும் இதனை கடைபிடிக்கிறார்கள்.
இதற்கு மாறாக, அன்பை ஈர்க்கும் வகையில் வாசனை திரவியங்களை பிடித்தவர்களுக்கு வாங்கிக்கொடுக்கலாம்.
மேலும் நகைகள், செடிகளை பரிசாக கொடுப்பதால் உறவுகள் பலப்படும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |