உங்கள் பெயர் 'A' என்ற எழுத்தில் தொடங்குகிறதா? உங்கள் குணாதிசயங்கள் இதுதான்
மனிதனின் அடையாளம் அவனின் பெயர். அந்த பெயருக்கு பின்னால் பல ஜோதிட விஷயங்கள் நிறைந்து உள்ளது. அந்த வகையில் எண் கணிதப்படி ஒருவர் பெயரின் முதல் எழுத்து வைத்து அந்த நபரின் குணாதிசியங்கள், ஆளுமைத்தன்மை என்று எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக, ‘A’ என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும். அவர்களின் சிறந்த குணம், மற்றும் பண்புகள் பற்றிப் பார்ப்போம். 'A' என்று தொடங்கும் பெயர் கொண்டவர்கள், கல்வி கற்பதில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்கள் ஒரு விஷயத்தை நினைத்துவிட்டால் அதை அடைந்து விடவேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தொழில் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். தொழில் தொடங்கினாலும் அதில் இவர்கள் பெரிய அளவில் சாதனை செய்வார்கள்.
இவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். புதிய ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு இருக்கும் கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
மிகவும் நேர்மையான சிந்தனை கொண்டவராக இருந்தாலும், சமயங்களில் இவர்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறுவதை நாம் பார்க்க முடியும். இவர்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருந்தாலும், தங்கள் குடும்பத்திற்கே இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மனதில் ஒரு இலட்சியத்தை வைத்து அதற்காக ஓடி உழைக்கக்கூடியவர்கள். மிகவும் லட்சியம் கொண்டவராக இருப்பதால் இவர்களிடம் கொஞ்சம் சுயநலமான மனநிலையை நாம் காணலாம். தான் என்ற எண்ணம் இவர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும்.
அதற்கு அவர்களின் திறமையும், நம்பிக்கையும் காரணம் என்றே சொல்லலாம். பெரும்பாலும், இவர்கள் யாருக்கும் அவ்வளவு எளிதில் வாக்குகள் கொடுக்கமாட்டார்கள். அவ்வாறு கொடுத்து விட்டால் அதை எவ்வளவு முயற்சி செய்தும் நிறைவேற்றி கொடுப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |