சாணக்கிய நீதி: உயர்ந்த மதிப்புள்ள பெண்ணின் தலைசிறந்த 5 குணங்கள்
நம்முடைய வரலாற்றில் சாணக்கியர் மிக பெரிய வழிகாட்டியாக இருக்கிறார். இவர் ஓர் இந்திய சமஸ்கிருத மொழி ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார்.
இவர் வாழ்க்கையை பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு சொல்லுகிறார். அந்த வகையில் ஒரு உயர்ந்த மதிப்புள்ள பெண்ணின் தலைசிறந்த 5 குணங்கள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.
1. ஒரு உயர்ந்த குணம் கொண்ட பெண் எந்த இடத்தில் பேசவேண்டுமோ அந்த இடத்தில் அவளுடைய வாதத்தை சரியாக வைப்பாள். அவ்வாறு பேசும் பொழுது அவள் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்கிறாள். அவள் தேவை இல்லாமல் அதிகம் பேசுவதால் எதுவும் மாறப்போவது இல்லை என்று தீர்க்கமாக நம்பக்கூடியவளாக திகழ்கிறாள்.
2. வாழ்க்கையில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் அதை பயம் இல்லாமல் எதிர்கொள்ளும் பனப்பான்மை கொண்டவராக இருப்பாள். அவள் யாரையும் அதிகம் குறை சொல்வது இல்லை. முடிந்த வரை அவள் மீது எந்த ஒரு குறையும் இல்லாதவாறு நடந்து கொள்வாள்.
3. தலைசிறந்த பண்புகள் கொண்ட பெண் மிகவும் நம்பிக்கைக்கு உரிய பெண்ணாக இருக்கின்றாள். அவளை நம்பி எந்த ஒரு ரகசியமும், பகிர்ந்து கொள்ளலாம். அவள் அதை பிறரிடம் எந்த கால சூழ்நிலையிலும் பகிர்ந்து கொள்வது இல்லை. அதே போல் அவளுக்கு என்று ஒரு வரையறை வகுத்து அதை எக்காரணம் கொண்டு மீறாமல் வாழ்ந்து வருபவளாக இருக்கிறாள்.
4. மனதில் மிகுந்த உறுதி கொண்டவளாக இருப்பதால் எந்த சூழ்நிலையிலும் இவள் வழி தவறி போவது இல்லை. இவளை ஏமாற்றுவது மிகவும் கடினமான விஷயம் ஆகும்.
5. இவள் தனக்கு ஏதேனும் அளவு கடந்த பிரச்சனை வருகிறது என்று தெரிந்தால் பயம் பதட்டம் அடையாமல் அதை நிதானமாக கையாள முயற்சி செய்கிறாள். இவள் பேச்சில் கண்ணியம் இருக்கும். இவள் ஒரு பொழுது பொய் பேசுவது இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |