9, 18, 27 நீங்கள் இந்த ராசியில் பிறந்தவர்களா? உங்களுக்கு எந்த தொழிலில் வெற்றியை கொடுக்கும்?

By Sakthi Raj Jul 06, 2026 04:47 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானது. அப்படியாக எண் கணிதம் கொண்டு நாம் ஒருவருடைய எதிர்காலம் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ளலாம்.அப்படியாக 9,8, 27 ஆகிய தேதிதில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் இன்று பார்ப்போம்.

எண் 9ல் பிறந்தவர்கள் முருகப்பெருமானின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் இவர்கள் எப்பொழுதும் அதிரடியாக முடிவு எடுக்கக்கூடியவர்கள். அதேபோல் மனதிற்கு பட்ட விஷயத்தை நேரடியாக சொல்லக்கூடியவர்கள்.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு காவல் துறை, கட்டுமானப்பணி, விளையாட்டுப் பொருட்கள் விற்பனை மற்றும் ஜிம் போன்ற உடற்பயிற்சி சார்ந்த துறைகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.

2026 ராகு பெயர்ச்சி: உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறும் ராசிகள் யார்?

2026 ராகு பெயர்ச்சி: உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறும் ராசிகள் யார்?

இவர்கள் நட்பு மற்றும் உறவு என்று எடுத்துக்கொள்ளும் பொழுது எண் 3,5,6 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நல்ல நட்பு பாராட்டுபவராக இருப்பார்கள். குறிப்பாக எண் 5 இவர்களுக்கு சிறந்த முன்னேற்றத்தை பெற்றுக் கொடுக்கும்.

இருப்பினும் எண் 8 கொண்டவர்களுடன் இவர்கள் பழகும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க பவள மோதிரம் அணிவது, முருகப்பெருமானுக்குச் சத்ரு சம்ஹார ஹோமம் செய்வது மற்றும் கந்த சஷ்டி கவசம் போன்ற மந்திரம் பாராயணம் செய்வது இவர்களுக்கு செய்யும் காரியங்களில் வெற்றியை பெற்றுக்கொடுக்கும்.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் சற்று ஈகோ குறைத்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மேலும், இந்த எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை முறை தெரிந்து கொள்ள இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US