Numerology: வியாபாரத்தில் அதிர்ஷ்டம் கொட்ட பயன்படுத்த வேண்டிய எண்கள்

By Sakthi Raj Nov 15, 2026 07:55 AM GMT
Report

ஜோதிட நம்பிக்கையில் எண் கணிதமும் மிகவும் முக்கியமான பாரம்பரிய நம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படியாக, எண் கணித நிபுணர் டாக்டர் மகா தன் சேகர் ராஜா அவர்கள் ஒருவர் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், வெற்றி, செல்வம் ஈர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டிய சிறப்பான எண்கள் அதனுடைய முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார். அதைப்பற்றி பார்ப்போம்.

பொதுவாக, எண் 33 என்பது லட்சுமி தேவியை குறிக்ககூடிய எண்ணாக இருக்கிறது. இது செல்வத்தை நமக்கு ஈர்த்து கொடுக்கக்கூடிய எண்ணாகும் என்கிறார்.

அதேபோல், இது பொருளாதார வளர்ச்சி பெருக இதனை வீடுகளில் வரவேற்கும் அறையில் செம்பு அல்லது வெள்ளி பலகையில் எழுதி வைத்தால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

அதேபோல், எண் 69 என்பது மந்திர எண்ணாக கருதப்படுகிறது. இது பொருளாதார நிறுவனங்கள், பெரிய பெரிய கடைகள், நிர்வாக அலுவலகங்களுக்கு ஏற்ற எண்ணாகும்.

Numerology: வியாபாரத்தில் அதிர்ஷ்டம் கொட்ட பயன்படுத்த வேண்டிய எண்கள் | Numerology Numbers That Attract Prosperity

கந்த சஷ்டி ஏழாம் நாள்: சொல்ல வேண்டிய மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும்!

கந்த சஷ்டி ஏழாம் நாள்: சொல்ல வேண்டிய மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும்!

இது வாடிக்கையாளர்களுடைய கவனத்தை ஈர்க்கவும் தொழிலில் வளர்ச்சி அடையவும் உதவியாக இருக்கிறது என்று சொல்கிறார். எண் 59 என்பது குடும்ப பிரச்சினைகள் மற்றும் சவால்களை தீர்க்கக்கூடிய எண்ணாக பார்க்கப்படுகிறது.

எண் 96 என்பது ராஜயோக எண்ணாக பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய அளவிலான தொழில் உற்பத்தி நிலையங்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

எண்99 என்பது தேவதை எண்ணாக பார்க்கப்படுகிறது. இதனை வீட்டு பூஜை அறையில் படுக்கையறை போன்றவற்றை வைக்கின்ற பொழுது நேர்மறை ஆற்றலை உருவாக்கி கொடுக்கிறது என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அதைப் பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US