தொடங்கும் சுக்கிர திசை: பொன் பொருள் சொத்துக்களை குவிக்க போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சுக்கிர பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு தனி நபருடைய செல்வம், ஆடம்பரம், திருமணம், சுகபோக வாழ்க்கை இவை அனைத்திற்கும் காரணியாக இருக்கிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் சுமார் 28 நாட்கள் வரை பெயர்ச்சியாகிறார். எனவே 12 ராசிகளை சுற்றி முடித்து மீண்டும் அதே ராசிக்கு திரும்புவதற்கு அவர் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது அக்டோபர் 9ஆம் தேதி புதன் பகவான் ஆளும் கன்னி ராசியில் சுக்கிர பகவான் செல்ல இருக்கிறார். சுக்கிர பகவானுடைய கன்னி ராசி பெயர்ச்சி சற்று பலவீனமாக இருந்தாலும் ஏற்கனவே கன்னி ராசியில் சூரிய பகவான் பயணித்து வருவதால் நீச் பங்க் ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த ராஜயோகம் எந்த மூன்று ராசிகளுக்கு மிகச்சிறந்த பலன்களை கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியன் இருப்பதால் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். நினைத்த பொருட்களை நினைத்த நேரத்தில் வாங்கக்கூடிய பாக்கியம் கிடைக்கப்போகிறது. ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும், எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவிகளும் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைக்கப் போகிறது. அதே சமயம் பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி சொத்துக்களும் இவர்கள் கைகளுக்கு கிடைக்கக்கூடிய நிலை உருவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த யோகமானது இவர்கள் மனதில் ஒரு தன்னம்பிக்கையை விதைக்க போகிறது. ஒரு சிலருக்கு வீடு பொருள் சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பு ஆகியவை கிடைக்க பெற போகிறார்கள். இவர்கள் பணியில் நற்பெயரையும் இவர் திறமைகளுக்கு ஏற்ப நல்ல பாராட்டுகளையும் பெற்று முன்னேறி செல்லக்கூடிய நிலை உருவாகும். சிலருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும் விலகி நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும். குடும்பத்தில் இவர்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து நடப்பார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் இருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தைரியம் வாழ்க்கையில் இலட்சியத்தோடு செயல்படக்கூடிய அமையப் பெறப் போகிறார்கள். தொழில் ரீதியாக இவர்கள் முன்னேற்றத்திற்கு நிறைய மாறுதல்களை செய்யப் போகிறார்கள். குடும்பத்தினர் இவர்களுக்கு பல வகையில் உதவியாக இருந்து இவர்கள் வாழ்க்கை பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய காலமாக இருக்க போகிறது. சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் மிகச்சிறப்பாக அமையப் போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







