பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கு இந்த ஒரு பரிகாரம் போதும்
ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கு இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்.
அனைவரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் பிரிவு என்பது நிச்சயமாக வந்திருக்கும். நாம் பள்ளி தோழிகள், நண்பர்கள், காதலர்கள் என யாரோ ஒருவரோடு கருத்து வேறுபாடு காரணமாகவோ அல்லது காரணம் இல்லாமலோ பிரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் திரும்பவும் ஒன்று சேர்வதை இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.
என்ன பரிகாரம்?
இந்த பரிகாரத்தை வயது வித்தியாசமோ, ஆண்-பெண் என்ற பேதமோ இல்லாமல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் எழுந்து குளித்து பூஜை அறைக்கு சென்று வெள்ளை காகித்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த காகிதத்தில் பச்சை நிற மையினால் நீங்கள் யாருடன் சேர விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை எழுதுங்கள். அதன்பிறகு காகிதத்தை நான்காக மடித்து சுவாமி படத்திற்கு முன் வைத்துவிடுங்கள்.
அதன்மீது ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரம் ஆகியவற்றை வைத்து கண்களை மூடி 5 நிமிடங்கள் நீங்கள் யாருடன் சேர விரும்புகிறீர்களோ அவர்களின் முகத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
அதாவது, அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும், மீண்டும் வந்து பேச வேண்டும். பாதியில் போன உறவு தொடர வேண்டும் என்று நினைத்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து 48 நாட்கள் தினமும் செய்ய வேண்டும்.
ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மாற்றவோ தீபம் காட்டவோ தேவையில்லை. பச்சை கற்பூரம் கரைந்த பிறகு மாற்றுங்கள். இப்படி நம்பிக்கையுடன் செய்தால் அந்த நபர் உங்களை சந்தித்து பேசிக் கொள்வதற்கான சூழ்நிலை அமையும்.