திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லவோற்சவம் கொண்டாட்டம்

By Yashini Jul 25, 2024 05:00 PM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் பல்லவோற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இந்த கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்த உத்திரட்டாதி நட்சத்திர நாளில் இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.

ஏழுமலையான் கோவிலுக்கு தந்த பல்லக்கு, ஏராளமான நிலம் மற்றும் நகைகள், பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றை மைசூர் மகாராஜா நன்கொடையாக வழங்கியதாக புராணங்கள் கூறுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லவோற்சவம் கொண்டாட்டம் | Pallavotsavam Held At Tirumala

அந்தவகையில், இந்தாண்டுக்கான பல்லவோற்சவம் நேற்று நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி, கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, அங்கு கர்நாடக அரசு சார்பாகவும், மைசூரு சமஸ்தானத்தின் சார்பாக அளிக்கப்பட்ட மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லவோற்சவம் கொண்டாட்டம் | Pallavotsavam Held At Tirumala

மைசூர் மகாராஜாவின் வம்சத்தினர் ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை வரவேற்றனர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US