வீட்டில் பல்லியை விரட்டாதீர்கள்-ஆன்மீகம் சொல்லுவது என்ன?
வீடு என்றால் கண்டிப்பாக ஜந்துக்களும் வசிப்பது உண்டு.அதில் முக்கியமான ஒன்று பல்லி.பல்லி இல்லாத வீடுகளை நாம் பார்க்கவே முடியாது.அப்படியாக சிலர் வீட்டில் பல்லி வாழ்வது அதிர்ஷ்டம் என்றும் சிலர் பல்லி வீட்டில் இருக்க கூடாது என்றும் சொல்வார்கள்.
நாம் இப்பொழுது இந்த பல்லி வீட்டில் இருப்பதால் உண்டாகும் ஆன்மீக மாற்றத்தை பற்றி பார்ப்போம். ஒரு முறை கௌதம முனிவர் அவரின் சீடராக இருந்த இருவர் பூஜை வேளையில் தீர்த்தம் எடுத்து வந்த பொழுது அதில் பல்லி விழுந்ததை பார்த்து மிகுந்த கோபம் அடைந்தார்.
கோபம் தாங்காமல் முனிவர் நீங்கள் இருவரும் பல்லிகளாக மாறுவீர்கள் என்று சாபம் விட்டார்.சீடர்கள் அவர்கள் தெரியாமல் செய்த பாவத்திற்கு மன்னியுங்கள் பாவ விமோச்சனம் கொடுங்கள் என்று கதறிய பொழுது முனிவரும் மனம் இறங்கி சத்திய விரத ஷேத்திரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை சென்று தரிசியுங்கள் என்று கூறினார்.
அப்படியாக இருவரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசித்து கடும் தவம் புரிய பெருமாளும் மனம் மகிழ்ந்து சபா விமோச்சனம் கொடுத்து இருவரையும் வைகுண்டம் அழைத்துக் கொண்டார்.அதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் சரீரங்கள் பஞ்சலோகங்களால் எனக்கு பின்னால் எப்பொழுதும் இருக்கும்.
அதை தொட்டு வாங்குபவர்கள் எல்லா வித தோஷம் விலகி மோட்சம் அடைவார்கள் என்று அருளினார். அப்படியாக காஞ்சி வரதராஜ பெருமாள் மூலவர் பின்னால் இரண்டு பஞ்சலோக பல்லிகள் இருக்கும்.ஒன்று வெள்ளி மூலமும்,இன்னொன்று தங்கமுலாமும் பூச பட்டு காட்சி கொடுக்கும்.
இந்த இரண்டையும் எவர் ஒருவர் தங்கள் கைகளால் தொட்டு வாங்குகிறார்களோ அவர்களுக்கு எல்லா வித தோஷமும் விலகும்.அப்படியாக ஒரு முறை காஞ்சி மகா பெரியவர் பல்லிகளை வணங்கி வரும் பொழுது தலையில் பல்லி விழ அதை சகுன பலனாக கருதி அவரின் சீடர்கள் பயந்தனர்.
ஆனால் பெரியவரோ, இது சத்திய விரத ஷேத்திரம், கவலைப்படாதீர்கள் இங்கு பல்லி தோஷம் பலிப்பதில்லை என்று கூறி புன்னகைத்தார்.
ஆக வீட்டில் பூஜை அறையில் பல்லிகள் தென் பட்டால் அதை விரட்டாதீர்கள்.அப்படியே விட்டு விடுங்கள்.பல்லி சுவாமி படங்களுக்கு பின்னால் இருப்பதால் நம்முடைய தோஷம் தான் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |