நீங்கள் எப்படிப்பட்ட ஆளுமை கொண்டவர்கள் - உங்கள் சுண்டு விரல் சொல்வது என்ன?
ஜோதிடம் கொண்டு நாம் ஓரளவு நம் எதிர்கால வாழ்க்கையை கணித்து விடும். அப்படியாக, ஒருவரின் தொழில் வாழ்க்கை எப்படி அமையும் என்று அவர்களின் சுண்டு விரல் கொண்டு சொல்ல முடியும் என்கிறார்கள். அந்த வகையில் உங்கள் சுண்டு விரல் எப்படி உள்ளது. உங்கள் தொழில் வாழ்க்கையும், உங்கள் ஆளுமை திறமை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1) ஒருவருக்கு மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் அதிக அளவிலான தூரம் இருந்தால் அந்த நபர் மிகவும் தன்னம்பிக்கை மிக்க நபராகவும் கடின உழைப்பை கொண்டவராக இருப்பார்.
2) ஒரு சிலருக்கு சுண்டு விரல் வளைந்து இருக்கும். அவ்வாறு வளைந்து இருக்கும் பொழுது அந்த நபர்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தயங்குவார். அதுவே சுண்டு விரல் நேராக இருந்தால் அந்த நபர் நேர்மையான மனிதராக இருப்பார்.
3) அதே போல் கையின் சுண்டு விரல் மெல்லியவும் நீளமாகவும் இருந்தால், அந்த நபர் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்.
4) மோதிர விரலும் சுண்டு விரலும் சமமாக இல்லாவிட்டால் அந்த நபர் உரையாடலில் மிகவும் சிறந்தவராக இருப்பார்கள். மேலும், சுண்டு விரல் மோதிர விரலை விட நீளமாக இருந்தால் அவர்கள் மக்கள் தொடர்பு அல்லது அரசியலில் சிறப்பாக செயல்படுவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |