பங்குனி மாதத்தின் சக்தி வாய்ந்த தேய்பிறை முருகர் வழிபாடு
தமிழ் மாதங்களில் எல்லா மாதமும் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு உரிய மாதம் என்றாலும் பங்குனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். அப்படியாக, முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டி திதி பங்குனி மாதம் வியாழக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பு.
அந்த வகையில் இன்றைய நாளில் முருகப்பெருமானை எவ்வாறு வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். இந்த கலியுகத்தில் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் அதிகம். பலரும் அவர்களின் இன்னல்கள் தீர, முருகப்பெருமானை முழுமையாக சரண் அடைந்து வழிபாடு செய்கிறார்கள்.
அவர்கள் வழிபாடு செய்து, இன்னும் கூடுதல் பலன் பெற முக்கிய நாளாக திகழ்வது தான் சஷ்டி திதி வரக்கூடிய நாள் ஆகும். இந்த வழிபாட்டை முடிந்தவர்கள் மார்ச் மாதம் 20ஆம் தேதி காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம்.
அதை தவற விட்டவர்கள், காலை 7:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:30 மணியிலிருந்து இரவு 10:30 மணிக்குள் செய்யலாம். வீட்டில் முருகப்பெருமானின் வேல் வைத்திருப்பவர்கள் அதற்கு இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
காரணாம், இளநீர் வைத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது என்பது மிக சிறந்த பலன் அளிக்கும். வீட்டில் வேல், சிலை இல்லை என்றால் முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அவருக்கு நெய்வேத்தியமாக இளநீர் படைக்கலாம்.
இளநீர் அபிஷேகம் செய்த பிறகு, முருகன் படத்திற்கு பூ மற்றும் மாலை சாற்றி முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் படித்து வழிப்படி செய்யலாம். அல்லது முருகனுக்கு உரிய இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்யலாம்.
மந்திரம்:
“ஓம் கந்த வடிவேலா சரணம் சரணம்”
இவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு முருகனின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் விலகி நன்மை சேரும். ஆக, நம்பிக்கையோடு முருகப்பெருமானை சரண் அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |