பிசாச் யோகம் 2025: அடுத்த 50 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில், கிரக நிலைகளில் ஏற்படும், மாற்றம் நம் வாழ்க்கையில் பல சூழ்நிலைகளை மாற்றுகிறது. அவற்றில் மிகவும் ஆபத்தானவை இந்த பிசாச் யோகமும். இந்த யோகம் சண்டாள், காலசர்ப்ப யோகங்களை விட அதிக துன்பத்தை ஏற்படுத்தும்.
மேலும், பிசாச் யோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிதி, மன, உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனி, ராகு இணைவதால் பிசாச் யோகம் உருவாகிறது. மார்ச் 29 அன்று சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஏற்கனவே அங்கு ராகு இருப்பதால் மே 18, 2025 அன்று பிசாச் யோகம் தொடங்கி 50 நாட்கள் தொடரும். இதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
சிம்மம்:
சனி, ராகு சேர்க்கை சிம்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் இவர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலக்தில் உயர் அதிகாரிகளிடம் மிகவும் கவனமாக இருப்பதால் பெரிய பிரச்சனையை தவிர்க்கலாம். தேவை இல்லாத கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகும்.
மீனம்:
சனி, ராகு சேர்க்கையால் மீன ராசிக்காரர்களுக்கு 50 நாட்கள் தொந்தரவாக இருக்கும். இவர்கள் 50 நாட்களும் மிகவும் கவனமாக பேச வேண்டும். இவர்கள் வார்த்தைகளே இவர்களுக்கு எதிராக திரும்பலாம். மன அழுத்தம், மூட்டு வலி போன்ற நிலை உருவாகும்.
மிதுனம்:
சனி, ராகு பத்தாம் இடத்திற்கு செல்வதால் அதிக அளவில் கோபம் உண்டாகும். சிலருக்கு அந்த கோபத்தால் தொழில் வாழ்க்கையில் பிரச்சனை உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் துரோகத்தை சந்திப்பீர்கள். எதிரிகள் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |