வீட்டில் 7 குதிரைகள் படம் வைக்கும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
நம் எல்லாருக்குமே வீடுகளை அழகான பொருட்களும், படங்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதில் பலரும் அழகுடன் சேர்ந்து வாஸ்து ரீதியாகவும் சில படங்கள் வாங்கி வைத்து அலங்கரிப்பார்கள்.
அதில் பெரும்பாலாக அனைவரது வீட்டிலும் 7 குதிரைகள் ஓடும் படம் காண முடியும். இந்த ஏழு குதிரைகளின் படம் வைப்பதால் நமக்கு நடக்கும் நன்மைகள் என்ன? என்று பார்ப்போம்.
அதாவது ஏழு குதிரைகள் என்பது வேகம், வெற்றி, தைரியம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஏழு என்ற எண்ணும் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆக, இந்த படத்தை வைப்பது நம்முடைய வீட்டிற்கு மிக சிறந்த பலனை வழங்கும்.
இந்த 7 குதிரைகளின் படத்தை வைக்க சிறந்த இடமாக வீட்டின் வாசல் அறை உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, தெற்கு திசையில் இந்த படம் இருப்பதும் வெற்றியை குறிக்கிறது. அதே போல், வடக்கு திசையில் இந்த படத்தை வைப்பதும் வெற்றியை குறிக்கிறது.
வடக்கு திசை செல்வத்தை குறிக்கிறது. அதேபோல், கிழக்கு திசையும் ஏற்றது. முன்னேற்றம் காண விரும்புபவர்களுக்கு கிழக்கு திசை சிறந்தது. ஆனால், ஜன்னல் அல்லது பிரதான கதவுக்கு அருகில் இந்த படத்தை வைக்கக்கூடாது.
மேலும், இந்த 7 குதிரைகள் கொண்ட படம் பல்வேறு விதமாக இருக்கிறது. சிவப்பு வயலில் ஏழு குதிரைகள் பந்தயத்தில் ஓடும் படம் இருந்தால் அது சுயமரியாதையை அதிகரிக்கும். 7 வெள்ளைக் குதிரைகள் படம் மிகவும் மங்களகரமானது.
வெள்ளை நிறம் அமைதியின் சின்னம். இது வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒருவரின் அமைதிக்கும் வழிவகுக்கிறது. எனவே 7 குதிரைகள் படத்தை வாசல் அறை, அல்லது வேலை செய்யும் இடத்தில் வைப்பது சிறந்த பலன் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |