நாளைய ராசி பலன் (28-02-2026)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு மன குழப்பம் உண்டாகும். நண்பர்களிடம் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். மதியமேல் மனச்சோர்வு விலகும்.

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். கணவன் மனைவி இடையே மூன்றாம் நபரின் தலையீடுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

மிதுனம்:

இன்று எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் உருவாகும். தாய்மாமன் வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சொந்தங்களால் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

பொல்லாத கண் திருஷ்டி விலக சக்தி வாய்ந்த 5 பரிகாரங்கள்

பொல்லாத கண் திருஷ்டி விலக சக்தி வாய்ந்த 5 பரிகாரங்கள்

கடகம்:

இன்று நண்பர்கள் மத்தியில் நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் வேண்டும். குழந்தைகளின் கல்விக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சிம்மம்:

இன்று குடும்பத்தில் உங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பார்கள். வழக்கு தொடர்பாக நீங்கள் முக்கிய நபரின் ஆலோசனைகளை பெறுவீர்கள்.

கன்னி:

வாழ்க்கையில் செய்த ஒரு தவறை நினைத்து வருந்துவீர்கள். உங்களிடம் பணம் வாங்கியவர்கள் அதை கொடுக்க தாமதம் ஆக்கலாம். வீடுகளில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

இன்று மனதில் ஒரு தைரியம் பிறக்கும். உடல் சோர்வு விலகும். எதையும் தீர ஆலோசித்து விசாரித்து செய்வீர்கள். படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தந்தை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

விருச்சிகம்:

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

தனுசு:

இன்று பிள்ளைகளுக்காக முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய நிலை வரும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையும்.

மகரம்:

வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேச வேண்டும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சில மனக்கசப்புகளை கொடுக்கும்.

கும்பம்:

வங்கி தொடர்பான கணக்குகளை சரிபார்க்கவும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். உங்களுக்கு தேவையான விஷயங்களை வாங்கி மகிழக்கூடிய நாள்.

மீனம்:

இன்று உங்களுக்கு மகள் வழியில் ஒரு ஆதரவான சூழல் உண்டாகும். நட்புகள் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US