பங்குனி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
காசிக்கு இணையான புண்ணிய ஸ்தலமாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் உள்ளது.
இங்கு அமாவாசை அன்று தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது ஐதீகமாக உள்ளது.
இந்நிலையில், இன்று பங்குனி அமாவாசையொட்டி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலையில் அக்னி தீர்த்தம் கடற்கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
புரோகிதர் மூலமாக எள்ளு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் நீராடி வழிபட தொடங்கினர்.
அதன்பின் ராமநாதசுவாமி கோவிலுக்குள் இருக்கக்கூடிய 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி, ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு முன்னோர்களுக்கு தங்களது கடமையை செய்தனர்.
திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வந்தால் புனிதமான நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தினை சுற்றி வந்து வழிபாட்டால் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரரும் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புரோகிதர்கள் தெரிவித்தனர்.