பங்குனி மாதத்தின் முக்கிய விரதங்களும் வழிபாடுகளும்

By Sakthi Raj Mar 16, 2025 12:30 PM GMT
Report

 தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் தான் நிறைய தெய்வங்களுடைய திருமணங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் நல்ல துணை வேண்டி விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

இந்த 2025 ஆம் ஆண்டின் பங்குனி மாதம் மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பங்குனி மாதம் உள்ளது. அந்த வகையில் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பங்குனி மாதத்தின் முக்கிய விரதங்களும் வழிபாடுகளையும் பற்றி பார்ப்போம்.

மீன ராசியில் புதன் வக்கிர நிலை-தொழிலில் அதிரடி மாற்றத்தை பெற போகும் 3 ராசிகள்

மீன ராசியில் புதன் வக்கிர நிலை-தொழிலில் அதிரடி மாற்றத்தை பெற போகும் 3 ராசிகள்

பங்குனி மாதம் 2025 முக்கிய விசேஷங்கள்:

மார்ச் 30 (ஞாயிறு) - பங்குனி 16 - தெலுங்கு வருட பிறப்பு

மார்ச் 31 (திங்கள்) - பங்குனி 17 - ரம்ஜான் பண்டிகை 

ஏப்ரல் 6 (ஞாயிறு) - பங்குனி 23 - ஸ்ரீ ராம நவமி 

ஏப்ரல் 10 (வியாழன்) - பங்குனி 27 - மகாவீர் ஜெயந்தி 

ஏப்ரல் 11 (வெள்ளி) - பங்குனி 28 - பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் 2025 விரத நாட்கள்: 

மார்ச் 29 (சனி) - பங்குனி 15 - அமாவாசை 

ஏப்ரல் 12 (சனி) - பங்குனி 29 - பௌர்ணமி

ஏப்ரல் 1 (செவ்வாய்) - பங்குனி 18 - கிருத்திகை

மார்ச் 25 (செவ்வாய்) - பங்குனி 11 - திருவோணம் 

மார்ச் 25, ஏப்ரல் 8 (செவ்வாய்) பங்குனி 11, பங்குனி 25 - ஏகதாசி

மார்ச் 20, ஏப்ரல் 3 (வியாழன்) - பங்குனி 6, பங்குனி 20 - சஷ்டி

மார்ச் 17 (திங்கள்) - பங்குனி 3 - சங்கடஹர சதுர்த்தி

மார்ச் 27 (வியாழன்) - பங்குனி 13 - சிவராத்திரி

மார்ச் 27, ஏப்ரல் 10 (வியாழன்) - பங்குனி 13, பங்குனி 27 - பிரதோஷம்

ஏப்ரல் 1 (செவ்வாய்) - பங்குனி 18 - சதுர்த்தி

பங்குனி மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள்:

மார்ச் 16 (ஞாயிறு) - பங்குனி 2 - தேய்பிறை முகூர்த்தம் 

மார்ச் 17 (திங்கள்) - பங்குனி 3 - தேய்பிறை முகூர்த்தம் 

ஏப்ரல் 4 (வெள்ளி) - பங்குனி 21 - வளர்பிறை முகூர்த்தம் 

ஏப்ரல் 7 (திங்கள்) - பங்குனி 24 - வளர்பிறை முகூர்த்தம் 

ஏப்ரல் 9 (புதன்) - பங்குனி 26 - வளர்பிறை முகூர்த்தம்

  ஏப்ரல் 11 (வெள்ளி) - பங்குனி 28 - வளர்பிறை முகூர்த்தம்

பங்குனி மாதம் 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள்:

மார்ச் 22, ஏப்ரல் 5 (சனி) - பங்குனி 8, பங்குனி 22 - அஷ்டமி

மார்ச் 23, ஏப்ரல் 6 (ஞாயிறு) - பங்குனி 9, பங்குனி 23 - நவமி

மார்ச் 20, 29 மற்றும் ஏப்ரல் 2 (வியாழன் சனி மற்றும் புதன்) - பங்குனி 6, 16 மற்றும் 19 - கரி நாட்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US