இன்றைய ராசி பலன்(13-04-2025)
மேஷம்:
இன்று சிலருக்கு கணவன் மனைவி இடையே சண்டை உருவாகலாம். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். உணவு விஷயங்களில் கவனம் அவசியம்.
ரிஷபம்:
வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். நண்பர்களை சந்தித்து பேசுவீர்கள். மதியம் மேல் உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்:
நேற்று வரை குடும்பத்தில் சந்தித்த நெருக்கடிகள் விலகும். மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மனம் பக்குவம் அடையும்.
கடகம்:
இன்று எதையும் நிதானமாக மேற்கோள்ள வேண்டும். சிலருக்கு அலைச்சல் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்ததை நிறைவேற்றும் நாள்.
கன்னி:
உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் செயல்களில் இன்று வேகம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
துலாம்:
இன்று மனதில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். உங்கள் செயல்களில் வெற்றிகள் கிடைக்கும். பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் செழிப்பாகும்.
விருச்சிகம்:
நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.
தனுசு:
குடும்பத்தில் சில சிக்கல் உருவாகும். தேவை இல்லாத பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டாம். பிறர் முடிக்காத காரியத்தை நீங்கள் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி ஆகும்.
மகரம்:
வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பணியாளர்களின் ஆதரவு அதிகரிக்கும்.
கும்பம்:
பணியிட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனம் குழப்பமடையும். அதன்பின் முயற்சி வெற்றியாகும்.
மீனம்:
குடும்பத்தில் சில சங்கடங்கள் உருவாகும். இன்று வெளியூர் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். இன்று முடிந்த அளவு புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |