பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடி செவ்வாய் விரதம்
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம்.அந்த மாதத்தில் அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட நாம் வாழ்க்கையில் தீராத பிரச்சனையும் முடிவிற்கு வரும்.
அப்படி இருக்க குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும்.சண்டை கருத்துவேறுபாடு என்று நிலவுவது உண்டு.அப்படி ஒருவர் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட சமயங்களில் சில கிரகநிலைகள் கூட காரணமாக இருக்கலாம்.
ஆக அப்படி ஒருவர் குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனை சந்திப்பவர்கள் ஆடி செய்வாய் அன்று எப்படி வழிபட வேண்டும் பார்ப்போம்.
செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்" கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாளாகும்.
ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மன் மற்றும் முருகப்பெருமானை நினைத்து வாழிபாடு செய்ய தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கைகூடும்.
அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும்.
ஆடி செவ்வாயின் விசேஷம் பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.
பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர்.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்கு பெறுவது நன்மையை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |