இந்த ராசியில் பிறந்தவர்கள் தான் அரசியலில் வாழ்க்கையில் ஜொலிப்பார்களாம்

By Sakthi Raj Mar 29, 2026 10:24 AM GMT
Report

 பொதுவாக, அரசியல் என்றாலே சிலருக்கு பிடிப்பதில்லை. ஆனால் சிலருக்கு அரசியல் தான் அவர்களின் வாழ்க்கையாக இருக்கும். அவர்களுடைய கனவு லட்சியம் எல்லாம் அரசியல் இறங்க வேண்டும் என்பது மட்டுமாகவே இருக்கும். அதாவது, அரசியல் என்றால் மக்கள் செல்வாக்கை குறிக்கிறது, கூட்டத்தின் தலைவனை அது குறிக்கிறது.

ஆக இந்த அமைப்பு பெற வேண்டும் என்றால் ஜோதிட ரீதியாக அவர்களுக்கு கிரகங்களுடைய ஒத்துழைப்பு அதிக அளவு அவசியம். அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அரசியல் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும்? யார் அரசியல் வாழ்க்கையில் ஜொலிப்பார்கள் என்று பார்ப்போம்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் தான் அரசியலில் வாழ்க்கையில் ஜொலிப்பார்களாம் | People Born This Zocdiac Become Best Politician

உலகத்தில் ஒருவர் வாங்கவே கூடாத சாபம் என்ன தெரியுமா?

உலகத்தில் ஒருவர் வாங்கவே கூடாத சாபம் என்ன தெரியுமா?

கும்பம்:

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சனிபகவான் என்றாலே அங்கு மக்களை குறிக்கக்கூடியவர். அதாவது மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்கள் நலனுக்காக போராட வேண்டும் என்ற எண்ணத்தை சனி பகவான் கொடுக்கிறார். ஆக இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மக்களிடம் அதிக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் அரசியலில் இவர்கள் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

துலாம்:

துலாம் ராசியின் சின்னம் தராசு ஆகும். அதாவது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை சரிபாதியாக பார்த்து செயல்படக்கூடிய தன்மையை இந்த துலாம் ராசியினர் பெறுகிறார்கள். ஆதலால் இவர்கள் சமுதாயத்தில் நடக்கின்ற நன்மை தீமைகளை ஆராய்ந்து அதற்கு முடிவு சொல்லக் கூடிய திறனை இவர்களுக்கு இந்த ராசியின் அதிபதி இவர்களுக்கு கொடுப்பதால் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடக்கூடிய செல்வாக்கை இவர்கள் பெறுகிறார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஒருவர் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

மேஷம்:

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு வீரம், வலிமை ஆகியவற்றை குறிக்க கூடியவராக இருக்கிறார். மேலும் செவ்வாய் பகவான் சமுதாயத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் அல்லது ஒரு முக்கிய அந்தஸ்து அமர வேண்டும் என்ற சிந்தனையை கொடுக்கிறது. ஆதலால் ஆதலால் இவர்களுக்கு எப்பொழுதுமே தலைமைத்துவ பண்பான பொறுப்புகள் தேடி வரும். அதிலும் குறிப்பாக அரசியல் வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US