இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக இருப்பார்களாம்? யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 21, 2026 05:20 AM GMT
Report

ஜோதிடத்தில் மூன்றாம் பாவம் உடன் பிறந்தவர்களை குறிக்கக் கூடியது. மேலும், மற்ற கிரகங்களின் நிலைகளைக் கொண்டு நாம் உடன்பிறந்தவர்களுடன் நம்முடைய பிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக ஒரு சில ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் ஒரு இணக்கமான உறவு இல்லாமல் எப்பொழுதும் சண்டே சச்சரவுகள் தவறாக புரிந்து கொள்ளுதல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் எதிரியாக செயல்படுவார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக இருப்பார்களாம்? யார் தெரியுமா? | People Born This Zodiac Have Always Siblings Fight

2,4,5,7,8,9 தேதியில் திருமணம் செய்யலாமா? சரியான திருமண தேதி தேர்தெடுப்பது எப்படி?

2,4,5,7,8,9 தேதியில் திருமணம் செய்யலாமா? சரியான திருமண தேதி தேர்தெடுப்பது எப்படி?

ரிஷபம்:

ரிஷப ராசியை பொறுத்தவரை இவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு என்று ஒரு நட்பு வட்டார மட்டும் வைத்துக்கொண்டு அவர்களிடமே எல்லா விஷயங்களையும் பகிர்ந்த கொள்ளக்கூடியவர்கள்.

இவை உடன் பிறந்தவர்களுக்கு பலன் நேரங்களில் பிடிக்காமல் போகின்றது. அங்கிருந்து துவங்கின்ற கருத்து வேறுபாடு பல நேரங்களில் மிகப்பெரிய அளவில் சண்டை சச்சரவுகளை கொடுத்துவிடுகிறது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் சுயநலமாக செயல்படக் கூடியவர்கள். இருப்பினும் இவர்கள் தங்களுடைய உடன் பிறந்தவர்களுக்காக நிறைய விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார்கள்.

இவர்களுடைய உடன் பிறந்தவர்கள் தங்களுடைய சகோதரன் சகோதரிகள் தங்களிடம் மட்டுமே பேச வேண்டும் என்ற பாசத்தினால் மிதுன ராசியினரை சுதந்திரமாக செயல்படதவாறு செய்து விடுவதால் இவர்களுக்கு இடையே சண்டை வந்துவிடுகிறது.

அடிக்கடி கெட்ட கனவுகளால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள்

அடிக்கடி கெட்ட கனவுகளால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள்

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் அவர்களுடைய கொள்கையில் மிகவும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். இவர்களுடைய இந்த கொள்கைகள் பல நேரங்களில் உடன் பிறந்தவர்களுக்கு பிடிக்காமல் போவது உண்டு.

இதனால் இருவருக்கும் சரியான புரிதல் ஏற்படாமல் எதிரியாகி விடுகிறார்கள். இருவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் சில கருத்து வேறுபாடுகளால் அவை தவறான புரிதலிலே முடிகிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US