பெருமாள் கையில் இருக்கும் சங்கிற்கு இத்தனை சிறப்புகளா?
பெருமாள் என்றாலே அவர் நெற்றியில் உள்ள நாமமும், அவர் கையில் இருக்கும் சங்கும் சக்கரம் தான் நினைவிற்கு வரும்.
மேலும் தர்மம் எங்கு தோற்கிறதோ அங்கு நிச்சயமாக சங்கு சக்கரம் வந்து காப்பாற்றும் என்று பெருமாள் பக்தர்களின் அதீத நம்பிக்கையாக இருக்கிறது.
அப்படியாக பெருமாளின் கையில் இருக்கும் சங்கு எத்தனை சக்தி வாய்ந்தது என்று பலரும் அறிந்திடாத ஒன்று, அதை பற்றி பார்ப்போம்
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் பெருமாளுடன் எப்பொழுதும் உடன் இருப்பவை.
அது பார்ப்பதற்கு அணிகலன்களாக இருந்தாலும் அது தான் பெருமாளின் ஆயுதம். இதில் வில், வாள் ,கதாயுதம் சக்கரம் ஆயுதங்கள் சரி சங்கு எப்படி ஆயுதமாகும் என்று சந்தேகம் வருவதுண்டு.
இப்படித்தான் மஹாபாரதத்தில் துரியோதனனும் ஏமாந்து போனான். பாரதப்போரில் கிருஷ்ணரின் உதவி வேண்டி அர்ஜுனன் துவாரகைக்கு சென்று போரில் எனக்கு உதவி செய்ய வேண்டி வேண்டுகிறார்.
அதை போல் துரியோதனனும் கிருஷ்ணரிடம் கிருஷ்ணா எனக்கு நீ போரில் உதவி புரிந்திட வேண்டும் என்று கேட்க, கிருஷ்ணர் இருவரிடம் நான் ஏற்கனவே தருமனுக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்து விட்டேன் என்றார்.
உடனே துரியோதனன் அப்படியானால் பாண்டவர்களுக்கு துணை நின்றாலும் ஆயுதங்கள் ஏந்தி போரிடக்கூடாது என்று வேண்டி கொண்டார், கிருஷ்ணரும் ஒத்துக்கொண்டார்.
ஆனால் அர்ஜுனன் என்ன கேட்டார் தெரியுமா? கிருஷ்ணா நீதான் எனக்கு தேரோட்டியாக வரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
அவர் கேட்டதில் துரியோதனனுக்கும் தெரியாத ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருக்கிறது, கிருஷ்ணரும் சம்மதித்தார்.
ஏனெனில் போரில் தேரோட்டுபவர்க்கே தனது எஜமானரின் வெற்றியை அறிவிக்க உரிமை உண்டு. போர் நடக்கும் போது தான் துரியோதனன் சங்கின் சக்தியை உணர்ந்தான்.
போரில் கிருஷ்ணர் தன் சங்கை எடுத்து ஊதிய போதெல்லாம் துரியோதனை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தார்கள்.
இதில் கிருஷ்ணரின் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு போரில் முழங்கியதால் நல்லவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
கிருஷ்ணர் மட்டும் அல்லாமல் கிருஷ்ணர் வைத்திருக்கும் ஆயுதங்களும் இத்தனை சக்தி வாய்ந்ததாக சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கிறது.