உலகத்தின் விஷேசமான மூன்று செல்வங்களை பெற இதை கடைபிடியுங்கள்
உலகத்தின் மிக பெரிய மூன்று செல்வங்களாக கருதப்படுவது செல்வம் ஆயுள்,ஆரோக்கியம் ஆகும்.இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு இருந்தால் மட்டுமே அவன் நல்ல வாழ்க்கை வாழ முடியும்.அப்படியாக இந்த மூன்றும் ஒரு சேர கிடைக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்க பகவான் நமக்கு அனைத்தையும் ஒரு சேர அருளிச்செய்வார் என்பது நம்பிக்கை.அதை பற்றி பார்ப்போம்.
நாம் பொதுவாக நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தையே தன்னுள் வைத்து கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள்.
சனிக்கு அதிபதியும் திகழ்பவர் பெருமாள். பெருமாளுக்கு உகந்த தினம் சனிக்கிழமை என்று அனைவரும் அறிந்ததே. இதனால் சனிக்கிழமை பெருமாளை விரதத்தை இருந்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.
மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.
சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைபிடித்து இறைவனின் அனுகிரகம் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |