பெருமாள் சிலை சரிந்ததால் கல்யாண வரதராஜ கோயிலில் பரபரப்பு
சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நிகழ்வில் பெருமாள் சிலை சரிந்ததால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு
இக்கோயிலானது 400 ஆண்டுகளுக்கு பழமையான மிகசிறப்பு வாய்ந்த கோயிலாகும்.
சின்னகாஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் இக்கோயில் கெல்லட்பெட் என்ற ஆங்கிலேயரால் தனது உதவியாளருக்காக கட்டப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்தவகையில் இவ்வாண்டிற்கான வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவையின் போது பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை சற்று சரிந்துள்ளது.
இதில் பட்டாச்சாரியார்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |