விநாயகரின் பரிபூர்ண அருள் பெற நாம் செல்ல வேண்டிய திருத்தலங்கள்
முழுமுதற்கடவுளான விநாயகர் நம்முடைய இன்னல்களை தகர்த்து நல்வழி காட்டுவர்.எப்பொழுதுமே கடவுளை மனதார நினைத்து வீட்டில விளக்கேற்றி வழிபடுவதை காட்டிலும் இறைவன் வீற்றி இருக்கும் அவன் இடத்திற்கு சென்று அவனை வணங்க நமக்கு அவனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
மேலும் எதிர் பாராத மாற்றங்கள் நிகழும்.அந்த வகையில் பல சிறப்புகளும் வரலாறுகளும் கொண்ட விநாயகரும் அவர் இருக்கும் ஊரின் பெயரும் பார்ப்போம்.
1)அழகிய விநாயகா்_ திருவாவடுதுறை.
2)ஆண்ட விநாயகா் - திருநறையூா்ச்சீத்தீச்சரம்.
3)ஆதி விநாயகா்- திருவையாறு.
4)ஆழத்துப்பிள்ளையாா்- திருமுதுகுன்றம் (விருத்தாசலம்).
5)உச்சிப்பிள்ளையாா்- திருச்சிராப்பள்ளி.
6)கங்கைக் கணபதி- திருக்குடந்தைகீழ்கோட்டம்.
7)கடுக்காய்ப்பிள்ளையாா்- திருக்காறாயில்.
8)கருக்குடிவிநாயகா்- திருக்கச்சூா்.
9)கள்ளவாரணப்பிள்ளையாா்- திருக்கடவூா்.
10)கற்பக விநாயகா்- பிள்ளையாா்பட்டி.
11)கூப்பிடு பிள்ளையாா்- திருமுருகன்பூண்டி.
12)கைகாட்டிவிநாயகா்- திருநாட்டியத்தான்குடி.
13)கோடிவிநாயகா்- திருக்கொட்டையூா்.
14)சிந்தாமணிகணபதி- திருமறைக்காடு (வேதாரண்யம்).
15)சுந்தரகணபதி- திருமழபாடி, திருக்கீழ்வேளூா்.
16)சூதவனப்பிள்ளையாா்- திருவுசாத்தானம்.
17)செவிசாய்த்தவிநாயகா்- திருஅன்பிலாலந்துறை.
18)சொா்ணவிநாயகா்- திருநள்ளாறு.
19)தாலமூலவிநாயகா்- திருக்கச்சூா்.
20)துணையிருந்தவிநாயகா்- திருப்பனையூா்.
21)நாகாபரண விநாயகா்- திருநாகைக்காரோணம். (நாகப்பட்டிணம்).
22)நிா்த்தன விநாயகா்- திருஇன்னம்பா்.
23)படிக்காசு விநாயகா்- திருவீழிமிழலை.
24)படித்துறை விநாயகா்- திருவிடைமருதூா்.
25)பிரளயங்காத்த விநாயகா்- திருப்புறம்பயம்.
26)பொய்யா விநாயகா்- திருமாகறல்.
27)பொல்லாப் பிள்ளையாா்- திருநாரையூா்.
28)மாவடிப்பிள்ளையாா்- திருநாகைக்காரோணம்.
29)மாற்றுரைத்த விநாயகா்- திருவாரூா், திருமுதுகுன்றம்.
30)முக்குறுணிப்பிள்ளையாா்- திருஆலவாய் (மதுரை) ,சிதம்பரம், மயிலாடுதுறை.
31)வரசித்தி விநாயகா்- திருவல்லம்.
32)வலஞ்சுழி விநாயகா்- திருவலஞ்சுழி.
33)வலம்புாி விநாயகா்- திருக்களா்
34)வாதாபி விநாயகா்- திருப்புகலூா், திருச்செங்காட்டாங்குடி.
35)வீரஹத்தி விநாயகா்- திருமறைக்காடு.
36)வெள்ளை விநாயகா்- திருவலஞ்சுழி.
37)வேதப்பிள்ளையாா். திருவேதிக்குடி.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |