12 வருட காலம் கஷ்டம் முடிவிற்கு வருகிறது.. குரு பெயர்ச்சியால் தலையெழுத்து மாறும் ராசிகள்

By Sakthi Raj May 28, 2026 04:23 AM GMT
Report

ஜோதிட ரீதியாக குருபகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அப்படியாக, குரு பெயர்ச்சி மிகச் சிறப்பாக மே 26 ஆம் தேதி நடந்த முடிந்திருக்கிறது. அதனையொட்டி ஜூன் மாதமும் முக்கியமான கிரக பெயிற்சிகள் நடக்கிறது.

இதனால் நீண்ட நாள் கவலைகளிலிருந்தும் கஷ்டங்களில் இருந்தும் ஒரு சில ராசிகள் விடுபட போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர்என்று பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் செவ்வாய் பகவான் அவருடைய சொந்த ராசிக்கு வருகிறார். இதனால் இவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த நேரத்தில் மனதில் உற்சாகம் பிறக்கும்.

நீண்ட நாட்கள் முடிவுக்கு வராத வேலைகள் நல்ல முடிவை பெறும். பிறகே ஜூன் 20ஆம் தேதி செவ்வாய் 2-ஆம் உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டிற்கு செல்வதால் இவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழிலில் ரீதியாக சில ஏற்ற இறக்கங்களை பெறுவார்கள்.

12 வருட காலம் கஷ்டம் முடிவிற்கு வருகிறது.. குரு பெயர்ச்சியால் தலையெழுத்து மாறும் ராசிகள் | Planetary Transits Bring Luck For 3 Zodiac In June

தீராத துன்பம் என்று புலம்புபவர்களா? கிருஷ்ண பகவானின் இந்த அறிவுரை கேளுங்கள்

தீராத துன்பம் என்று புலம்புபவர்களா? கிருஷ்ண பகவானின் இந்த அறிவுரை கேளுங்கள்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு குருபகவான் உச்சம் பெறுவதால் இவர்களுக்கு சமுதாயத்தில் கௌரவமும் மரியாதையும் கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்கள் குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அதே போல், எதிர்பார்த்து காத்திருந்த நற்செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதலும் ஆரோக்கியத்தல் முன்னேற்றமும் உண்டாகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் இவர்களின் பத்தாம் வீட்டில் இருக்கிறார். இதனுடைய விளைவாக இந்த மாதம் இவர்களுக்கு வருமானத்தில் எந்த ஒரு பஞ்சமும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாது. அதுமட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாக சில சுற்றுலாப் பயணங்கள் சில நேரலாம்.

ஒரு சிலர் புண்ணிய யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் சனிபகவானுடைய தாக்கத்தால் இவருடைய மனம் அவ்வப்போது நிலை இல்லாத தன்மை ஏற்படும் என்பதால் கவனம் வேண்டும்.

நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா?

நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா?

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் குரு பகவானுடைய ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கப் போகிறது. இவர்களுக்கு குடும்பத்தில் நற்செய்தி வந்து சேரும். நீண்ட நாட்கள் வாழ்க்கையில் தடைபட்டிருந்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும்.

இவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் அங்கீகாரம் கிடைக்கும். அந்த காலகட்டங்களில் இவர்கள் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது அதில் வெற்றிகளும் புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US