எந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு கண்டங்களை கடந்து மீண்டு வர முடியும்
ஜோதிட ரீதியாக நாம் கிரகம் அமைப்புகளை கொண்டு ஒவ்வொரு விஷயங்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். அதாவது அவர்கள் எப்பொழுது எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் உடனடியாக மீண்டு வரக் கூடிய ஒரு நம்பிக்கையை வைத்திருப்பார்கள்.

எவ்வளவு கீழே தள்ளினாலும் அவர்கள் மனம் தளர்வதே இல்லை. அந்த நபரை பார்த்து பலரும் வியந்து பார்ப்பது உண்டு.
அந்த வகையில், எத்தனை தோஷங்கள், சாபங்கள், கர்மவினைகள் ஒருவருக்கு ஜாதகர் ரீதியாக இருந்தாலும் அவர்களுக்கு லக்னாதிபதி மற்றும் லக்னத்திற்கு 5,9, 11 ஆம் அதிபதிகள் இவற்றில் ஏதாவது ஒன்று பலமாக இருந்தால் அந்த நபர் எவ்வளவு பெரிய கஷ்டங்களை துன்பங்களை துயரங்களை சந்தித்தாலும் அதிலிருந்து அவர்கள் உடனடியாக மீண்டு வருகிறார்கள்.
கண்டதை அவர்கள் கடந்து இயல்பு நிலைக்குத் திரும்பி போராடி ஜெயிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |