கட்டுக்கடங்காத செல்வ வளங்களை தரும் சக்திவாய்ந்த 5 கிருஷ்ண மந்திரங்கள்
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் 9வது அவதாரமாக விளங்குவது கிருஷ்ண அவதாரம்.
இந்த அவதாரத்தில் பகவான் கிருஷ்ணர், அனைத்து காலத்திற்கும் பொருந்தும் வகையிலான பகவத் கீதையை போதித்துள்ளார்.
சக்திவாய்ந்த 5 கிருஷ்ண மந்திரங்களை சொல்லி வருவதால் வெற்றி, செல்வ வளம் தொழில், இறையருள், உறவுகள் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவு வளரும்.
தினமும் காலையில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் இந்த மந்திரங்களை சொல்வது சிறப்பு.
சரியாக ஒன்றரை லட்சம் முறை இந்த மந்திரங்களை நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் உங்களின் வேண்டுதல் நிறைவேறி விடும்.
எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அது தீர வேண்டும் என நினைப்பவர்கள் தினமும், நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
அதிகாலையில் வீட்டில் விளக்கேற்றி, கிருஷ்ணருக்கு பூக்களால் அலங்கரித்து, நைவேத்தியம் படைத்து இந்த மந்திரங்களை சொல்வது இன்னும் விரைவான பலனை தரும்.
சக்திவாய்ந்த 5 கிருஷ்ண மந்திரங்கள் என்னென்ன என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
1. கிருஷ்ண காயத்ரி மந்திரம்
ஓம் தேவகீநந்தனாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத்
2. ஹரே கிருஷ்ண மகாமந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம
ஹரே ஹரே
3. கிருஷ்ணர் மூல மந்திரம்
ஓம் கிருஷ்ணாய நமஹ
4. ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய சரணம் மமஹ
5. கிருஷ்ண மந்திரம்
கிருஷ்ணாய வாசுதேவாய ஹராரே
பரமாத்மனே ப்ரணதாஹா
க்ளேஷணஸயே கோவிந்தாய நமோ நமஹ.