இன்றைய ராசி பலன்(29-10-2025)
மேஷம்:
சிலருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பாராத சில கஷ்டங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. நினைத்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். மறைமுக எதிரிகளை கண்டு கொள்வீர்கள்.
ரிஷபம்:
இன்று கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான உறவு உண்டாகும். உறவினர்கள் வழியே நல்ல ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் விலகும்.
மிதுனம்:
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த விஷயம் ஒன்று நடக்கும். இன்று கட்டாயமாக ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
கடகம்:
தொலை தூர பயணமாக சிலர் நண்பர்களுடன் செல்ல வாய்ப்புகள் உள்ளது. கலை துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நல்ல. குடும்பத்தில் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
சிம்மம்:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் சில சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. மதியம் மேல் சிலருக்கு எதிர்பாராத சில சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது.
கன்னி:
இன்று கட்டாயம் உங்கள் உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு சில உடல் உபாதைகள் உண்டாகலாம். பிறரிடம் வாழ்க்கை ரகசியம் பகிராதீர்கள்.
துலாம்:
சிலருக்கு மனதில் உள்ள கவலை விலகும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவார்கள். வேலையில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
சகோதரி வழி உறவால் பல கஷ்டங்கள் வரலாம். தொழில் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத சிக்கல்கள் வரலாம். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு:
உங்கள் பிள்ளைகள் மீது அன்பு கொள்வீர்கள்.,அவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வாழ்க்கையில் தைரியம் பிறந்து சில முன்னேற்ற பாதை நோக்கி செல்வீர்கள்.
மகரம்:
இன்று உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கோபத்தை குறைந்து கொண்டு வேலையில் கவனம் செலுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்:
கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கும் நாள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக அமையும். உறவினர்கள் உங்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பார்கள்.
மீனம்:
இன்று சில உண்மைகள் புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் நடக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நன்மையான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |