இந்த 3 ராசிகளிடம் நண்பர்களாக இருப்பது மிகவும் கஷ்டமாம்
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் கட்டாயம் நண்பர்கள் அவசியம். அதேபோல் எல்லோருக்கும் நண்பர்களும் கட்டாயம் இருப்பார்கள். அப்படியாக ஒரு சில நபர்களிடத்தில் மட்டும் நாம் நட்பாக பழகுவதில் நிறைய சிரமங்கள் சந்திப்பதை நாம் காணலாம்.
அதாவது நாம் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் அந்த நட்பு நீண்ட நாட்களுக்கு நீட்டிக்காத அளவிற்கு அந்த நட்பு நமக்கு ஏதோ ஒரு சிரமம் கொடுத்து கொண்டே இருக்கும். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு ஒரு காரணம் ஒன்று சொல்லலாம். அப்படியாக எந்த மூன்று ராசிகளிடம் நட்பாக பழகுவது மிகவும் கடினம் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசியின் அதிபதி சந்திர பகவான். பொதுவாகவே கடக ராசியினருக்கு உணர்ச்சிகளை கையாள்வதில் இவர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும். அதாவது சாதாரணமாக நாம் ஒரு விஷயத்தை சொல்ல போக அதை அவர்கள் மிகவும் கடினமாக எடுத்துக்கொண்டு மனவருத்தம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் இவர்களிடம் நட்பாக பழகுவது என்பது பல நேரங்களில் பல நபர்களுக்கு மன கசப்பை கொடுத்து விடுகிறது.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான். இவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். நட்பாக இருக்கட்டும் அல்லது பகைவர்களாக இருக்கட்டும் இவர்கள் மனதில் பட்டதை ஒருவர் காயப்படுவார் என்று கூட யோசிக்காத அளவிற்கு சில வார்த்தைகளை சமயங்களில் பயன்படுத்தி விடுவார். ஆதலால் இவர்களிடம் நெருங்கி பழகுவதற்கு பலருக்கும் சற்று பயம் இருக்கும். மேலும் இவர்கள் உணர்வு ரீதியாக பழகுவதை காட்டிலும் அறிவு ரீதியாக நட்பை வளர்க்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். சமயங்களில் இவர்கள் மிகவும் சோம்பேறியாக இருக்கக்கூடிய நபர்கள் என்றும் சொல்லலாம். இவர்கள் நட்பையும் அவர்களுடைய தொழில் வாழ்க்கையும் குடும்பத்தையும் சமாளித்து கொண்டு போவதில் சில சிரமங்களை அவ்வப்போது சந்திப்பதை பார்க்க முடியும். ஆதலால் நட்புகள் இவர்களை தேடி சென்றாலும் சில கால சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாமல் இவர்கள் நட்புகளை விட்டு விலகி இருக்கக்கூடிய நிலை பெரும்பாலும் உருவாகிவிடுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |