கோடீஸ்வர யோகம் தரும் அட்சய நவமி எப்பொழுது? இந்த தினத்தை தவற விடாதீர்கள்
அட்சய நவமி என்பது அக்ஷய திரிதியைக்கு இணையான சக்தி வாய்ந்த நாளாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் சத்ய யுகம் துவங்கியதாக நம்பப்படுகிறது. ஆதலால் அன்றைய தினத்தில் நெல்லி மரத்தை நாம் வழிபாடு செய்வதன் வழியாக நம்முடைய குடும்பத்தில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் நமக்கும் புண்ணியம் சேர்வதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் அட்சய நவமி எப்பொழுது? அன்றைய நாள் நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். ஒரு மனிதனுக்கு பல கனவுகள் இருக்கும். அந்த கனவுகள் நிறைவேற பகவான் அவர்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கக்கூடிய அற்புதமான நாள் தான் இந்த அட்சய நவமி ஆகும்.

இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதால் இதனை ஆம்லா நவமி என்றும் அழைப்பார்கள். ஐப்பசி மாதத்தில் அமாவாசையை தொடர்ந்து வரும் வளர்பிறை நவமியை தான் நாம் அட்சய நவமியாக கொண்டாடுகின்றோம். அட்சய நவமி என்பது நமக்கு அழியாத புண்ணியத்தை கொடுக்கக்கூடிய நாளாகும்.
இந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அதாவது நவமி திதி அக்டோபர் 30 காலை 10.06 மணிக்கு தொடங்கி அக்டோபர் 31 காலை 3, 00 மணி வரை நீட்டிக்கிறது. பூஜை செய்வதற்கு உகந்த நேரமாக அக்டோபர் 31 காலை 6.32 மணி முதல் 10.03 மணி வரை உள்ளது. அட்சய என்ற சொல்லுக்கு அழியாதது என்று பொருள்.
இந்த நாளில் நாம் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு மிகச்சிறந்த மாற்றத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். அதாவது ஆன்மீகத்தில் ஒரு சிறிய பூஜை கூட நம்முடைய விதியை பெரும் அளவில் மாற்றக் கூடிய சக்தி வாய்ந்ததாக அமையும்.
ஆதலால் நாம் அட்சய நவமி அன்றைய நாளில் செய்யக்கூடிய பூஜை நம் விதியை மாற்றி கோடீஸ்வர யோகத்தை கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பை கூட நமக்கு கொடுத்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் நெல்லிக்காய் மரத்தில் பகவான் விஷ்ணுவும் லக்ஷ்மி தேவியும் வாசம் செய்வதாக ஐதீகம்.

அதனால் மரத்தடியில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய பொருளாதாரத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது புராணங்களில் இருக்கிறது. அதோடு அந்த நாளில் நாம் பிறருக்கு தானம் செய்வதாலும் மென்மேலும் நம்முடைய வளர்ச்சி உருவாகும் என்றும் சொல்கிறார்கள்.
மேலும் நெல்லிக்காய் உயிர் சக்தியின் அடையாளம். இந்த நாளில் நெல்லி பிரசாதம் உண்பவர்களுக்கு நாள்பட்ட நோய்கள் குணமாகும். அதோடு ஆரோக்கியத்தை குணப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான அதிசயம் நடக்கும் என்றும் புராணங்களில் இருக்கிறது.
இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணு பகவானுடைய மந்திரங்களை பாராயணம் செய்பவர்களுக்கு கேட்ட வரம் அனைத்தையும் விஷ்ணு பகவான் அருள்வார். அதோடு இந்த அட்சய நவமி நாளில் வீடுகளில் தங்கம் உப்பு போன்ற மங்களகரமான பொருட்கள் வாங்குவதாலும் நம்முடைய வீடுகளில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |