குரு பகவானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள்- எப்பொழுதும் ராஜவாழ்க்கை தானாம்

By Sakthi Raj Oct 28, 2025 10:02 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவான் மிக முக்கியமான சுப கிரகமாக இருக்கிறார். குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமர்ந்து விட்டால் அந்த ஜாதகர் படிப்பிலும் சமுதாயத்தில் நல்ல பெயருடனும் வாழ்வார்கள். அப்படியாக இயல்பாகவே குருபகவானுக்கு ஒரு சில ராசிகளை மிகவும் பிடிக்குமாம்.

அவர்களுக்கு குரு பகவான் உடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் இருந்து, அவர்கள் வாழ்க்கையில் துன்பத்தை சந்தித்தாலும் அதை மிக எளிதாக தாண்டி வெற்றியைப் பெறக்கூடிய வலிமையை குருபகவான் கொடுத்துவிடுவாராம். அப்படியாக குரு பகவானுக்கு மிகவும் பிடித்த மூன்று ராசிகள் யார் என்று பார்ப்போம்.

2025 நவம்பர்: நடக்கும் கிரக மாற்றத்தால் இந்த 2 ராசிகளுக்கு ஜாக்பாட் தானாம்

2025 நவம்பர்: நடக்கும் கிரக மாற்றத்தால் இந்த 2 ராசிகளுக்கு ஜாக்பாட் தானாம்

கடகம்:

கடக ராசியினருக்கு குரு பகவான் உடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும். இவர்கள் குரு பகவானுடைய அருளால் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதை அவர்கள் சமாளித்து வெளியே வரக்கூடிய பக்குவத்தை குருபகவான் இவர்களுக்கு அருளுகிறார். மேலும் கடக ராசியின் பிறரை வழிநடத்துவதில் மிகச்சிறந்தவராக இருப்பார்கள். அதற்கும் குரு பகவான் உடைய அருளே காரணம்.

தனுசு:

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். தனுசு ராசியினர் ஞானத்துடன் இருக்கக்கூடியவர்கள். இவர்களுக்கு இயற்கையிலேயே அதிக அளவிலான அறிவும் அதிக அளவிலான நேர்மறை சிந்தனைகளும் இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அமைதியான நபராக மற்றும் சாதாரண நபராக இருந்தாலும் இவர்களுக்கு குரு பகவானுடைய அதிர்ஷ்டம் இவர்களை மிக உயர்ந்த இடத்திற்கு கூட்டி செல்லும்.

மீனம்:

மீன ராசியின் அதிபதியும் குரு பகவான் தான். ஆக மீன ராசியினருக்கு குருபகவான் துன்பத்தை கொடுத்தாலும் அதற்கான வழியையும் சேர்த்து அவர் கொடுத்து விடுகிறார். ஆதலால் மீன ராசியினர் எவ்வளவு பெரிய இக்கட்டான கஷ்டத்தில் இருந்தாலும் அவர்கள் அதிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பி விடுவார்கள். மேலும் மீன ராசியினருக்கு இறை நம்பிக்கை அதிகம் இருக்கும். இறை நம்பிக்கையால் இவர்கள் நினைத்ததை பல நேரங்களில் பெறக்கூடிய ஆற்றலும் குருவின் அருளால் பெற்று இருப்பார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US