நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் விலக சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
மனிதர்களுடைய மனமும் வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பல நேரங்களில் ஏற்ற இறக்கங்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில், ஏதேனும் ஒரு கால சூழ்நிலையால் நம்முடைய மனமானது ஒரு துன்பத்திற்கு ஆளாகின்ற பொழுதும் எதிர்மறை எண்ணங்களால் மனம் உடைந்து போகின்ற பொழுதும் நாம் மனம் தளராமல் உடனடியாக கடவுள் வழிபாட்டை மேற்கொள்வதோடு ஒவ்வொரு இறைவனுக்குரிய மந்திரத்தையும் பாராயணம் செய்யும்பொழுது நல்ல மாற்றத்தை சந்திக்கலாம்.
அப்படியாக, நீங்கள் துவண்டு இருக்கின்ற வேலையில் எதைப் பற்றியும் சிந்தனை கொள்ளாமல் உடனடியாக பாராயணம் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம்.

1. ஓம் கம் கணபதயே நமஹா:
விநாயகப் பெருமானுடைய இந்த மந்திரத்தை நீங்கள் சவால்களை எதிர்கொள்கின்ற பொழுதும், தடைகளை சந்திக்கின்ற பொழுதும்பாராயணம் செய்கின்ற பொழுது அவை எல்லாம் உடைந்து உங்களுக்கு செல்வம் அதிர்ஷ்டம் ஞானம் ஆகியவை கிடைக்கிறது.
2. ஓம் தும் துர்காயை நமஹா:
நீங்கள் மனம் உடைந்து இருக்கிறீர்கள், எதிரிகளால் தொல்லை இருக்கிறது, தேவையில்லாத குழப்பம் சூழ்ந்து இருக்கிறது, மன வலிமையை இழந்து விட்டீர்கள் என்று துவண்டு நிற்கின்ற பொழுது இந்த மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். உடனடியாக உங்களுடைய மனதில் ஒரு நல்ல மாற்றம் நடப்பதை பார்க்கலாம்.
3. உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம்
பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!

இது மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை போற்றக்கூடிய மந்திரமாகும். இவை நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் பகைமை. போட்டியை வெல்லுதல், பாதுகாப்பு அச்சம் இவை எல்லாம் நீக்கி மன உறுதியை கொடுக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |