அனைவரும் வள்ளலாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன

By Sakthi Raj Oct 20, 2026 11:00 AM GMT
Report

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று வள்ளல் பெருமான் சக உயிர்களில் இருந்து செடி கொடிகள் என எல்லாவற்றிலும் அவர் அன்பாக நடந்து கொண்டவர். அந்த வகையில், வள்ளல் பெருமானை பற்றி பார்ப்போம்.

வள்ளலார் அவர்கள் எப்பொழுதும் வெண்ணிற ஆடையில், அவருடைய உடல் முழுவதையும் மூடி இருப்பதையும் கைகளை எப்பொழுதும் கட்டி இருப்பதையும் பார்த்திருப்போம்.

அதாவது வள்ளலார் அவர்கள் அவரிடம் உள்ள ஆணவத்தை தவிர்ப்பதற்காகவும், அடக்கத்தை கடைப்பிடிப்பதற்காகவும் அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.

அதாவது கைகளை வீசி நடந்தால் ஆணவம் வந்துவிடுமோ என்று அவர் எண்ணி கைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்.

தசரா 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

தசரா 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

மேலும், ஒருவருடைய உடலை தொடுகின்ற பொழுது அந்த நபரின் உடைய நல்ல மற்றும் தீய எண்ணங்கள் மற்றவர்களுக்கு பரவக்கூடும் என்ற நம்பிக்கையில் வள்ளலார் மற்றவர்கள் தொடுவதையும் தவிர்த்து இருக்கிறார்.

இவர் உலக ஆசைகளை தவிர்த்து மற்றவர்களின் உடை அலங்காரம் அல்லது அந்தஸ்துகளை கவனிப்பதில் விருப்பம் காட்டாமல் எதிலும் பற்றின்றி சமமாக பார்க்கக்கூடிய நிலையை வள்ளலார் கொண்டிருந்தார்.

ஆக, இவ்வளவு அற்புதம் நிறைந்த வள்ளல் பெருமான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவருடைய திருவருட்பாவை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், வள்ளலார் அவர்களைப் பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார் செந்தில் ஐயா அவர்கள். அதை பார்த்த தெரிந்து கொள்வோம்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US