உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் பெற்றுக் கொடுக்கக்கூடிய பெருமாள் மந்திரம் எது தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசி நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பான அம்சம் இருக்கிறது. அதை அவர்கள் பின்பற்றி அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வரும் பொழுது நிச்சயம் அவர்களுக்கான மாற்றம் உண்டாகும்.
அதாவது நம்மை அறியாமல் நம்முடைய ராசி மற்றும் நட்சத்திர குணாதிசயங்கள் நம்மை வழிநடத்தி கொண்டு செல்லும். அதுமட்டுமில்லாமல் நம்முடைய ராசி நட்சத்திரங்களுக்குரிய கடவுள்களின் ஆசிர்வாதமும் நாம் அவர்களை பிரார்த்தனை செய்யாமல் நமக்கு எப்பொழுதும் இருக்கும்.
ஆக இவ்வாறு ஒரு மிகப்பெரிய சுவாரஸ்யம் இந்த ஜோதிடத்தில் இருக்கின்ற வேளையில் நாம் நமக்கான விஷயங்களை தெரிந்து கொண்டு அதை நாம் வாழ்க்கையில் கொண்டு வரும் பொழுது நிச்சயம் நல்ல மாற்றம் உண்டாகும்.
அப்படியாக மகாலட்சுமியை மனைவியாக கொண்டிருக்கும் பெருமாள் அவர் நமக்கு எண்ணில் அடங்காத அதிசயங்களை நிகழ்த்த கூடியவர். ஒருவருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்றால் நிச்சயம் பெருமாள் வழிபாடு அவர்களுக்கு கைகொடுக்கும். அந்த வகையில் 12 ராசிகளும் அவர்களுக்கு உரிய பெருமாள் மந்திரங்கள் என்ன ? என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு அவர்கள் தொழில் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்க "ஓம் கேசவாய நம" என்ற மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்தால் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் அவர்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய வறுமை நீங்கி செல்வமும் குடும்பத்தில் உள்ளவர்கள் இடையே நெருக்கமும் ஒற்றுமையும் உண்டாக தினமும் "ஓம் நாராயணாய நம"என்ற மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் விலகி தொழில் ரீதியாக மிகப்பெரிய உயரத்தை பெற "ஓம் மாதவாய நம" என்ற மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்தால் அவர்களுடைய மனக்குழப்பங்கள் விலகி முன்னேற்றம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்கு நீண்ட நாள் கடன்களை அடைப்பதற்கும் மீண்டும் கடன் வாங்காத நிலை பெறுவதற்கும் தினமும் "ஓம் கோவிந்தாய நம" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய நிச்சயம் பொருளாதாரத்தில் எந்த ஒரு பின்னடைவும் சந்திக்க மாட்டார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினரின் மன பயம் விலகி எதையும் துணிந்து போராடி வெற்றி பெறுவதற்கு இவர்கள் தினமும் "ஓம் விஷ்ணவே நம" இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைவார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு அவ்வப்போது குடும்பங்களில் நிறைய சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆதலால் இவர்களுக்கு எப்பொழுதும் மன அமைதி என்பது இருப்பதில்லை. இவர்கள் தினமும் "ஓம் மதுசூதனாய நம" இந்த மந்திரத்தை மனதார பாராயணம் செய்ய நல்ல காலம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக ஒரு சிறந்த அங்கீகாரம் அல்லது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்கள் மனம் தளராமல் தினமும் "ஓம் த்ரிவிக்ரமாய நம" இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வர நிச்சயம் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் உடல் ரீதியாக நிறைய சிரமங்களை சந்தித்து கொண்டு இருந்தால் அவர்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்க "ஓம் வாமநாய நம" இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியினர் தங்களிடம் எவ்வளவு பணம் வசதி இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாத நிலை இருக்கிறது என்று மன வருத்தம் இருந்து கொண்டே இருந்தால் அவர்கள் அந்த நிலைமை மாற தினமும் "ஓம் ஸ்ரீதராய நம" இந்த மந்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது நல்ல மாற்றம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியினர் மனதில் எப்பொழுதும் ஒருவகையான குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது, எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்று விரக்தியில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த "ஓம் ஹ்ருஷிகேசாய நம" இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வர அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினர் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உயரத்தை அடைந்து சமுதாயத்தில் ஒரு நல்ல பெயருடன் வாழ வேண்டும் என்ற ஒரு ஏக்கம் நிறைவேற "ஓம் பத்மநாபாய நம" தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வர நிச்சயம் அவர்கள் வாழ்க்கை உயர்ந்த நிலைக்கு செல்லும்.
மீனம்:
மீன ராசியில் என்னதான் உழைத்தாலும் கையில் பணமே தங்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருந்தால் இவர்கள் தினமும் " ஓம் தாமோதராய நம" இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் பெருமாளின் அருளால் அவர்களுடைய வாழ்க்கை வளமாக மாறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |