எந்த ராசிக்காரர்கள் எந்த விரதம் மேற்கொண்டால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா?

By Sakthi Raj May 12, 2026 07:15 AM GMT
Report

ஜோதிடம் என்பது ஒரு நுணுக்கமான கலையாக இருக்கிறது. மேலும், ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு ராசி அதிபதி இருக்கிறார்கள். அவர்களுடைய காரகத்துவம் செயல்பாடுகளை நம் வாழ்க்கையில் காணலாம். அந்த வகையில் ஒவ்வொரு ராசி அடிப்படையில் அந்த ராசிக்கு உரிய வழிபாட்டு தெய்வங்கள் இருக்கிறார்கள்.

அவர்களை நாம் உரிய நேரத்தில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் கடினமாக கடக்க வேண்டிய காலங்களை நாம் சுலபமாக இறையருளால் கடந்து விடலாம் என்பது நம்பிக்கை. அப்படியாக நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த விரதம் என்பது நம்முடைய மனதையும் உடலையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இறைவன் மீது பக்தி செலுத்தி நமக்கு ஏற்படக்கூடிய கர்ம வினைகளை கரைப்பதாகும். பொதுவாகவே, நம் உடலும் மனமும் இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற பொழுது பாதி கர்ம வினைகள் நம்மை விட்டு விலகுவதை நாம் காணலாம்.

அப்படியாக 12 ராசிகளின் அவர்கள் எந்த விரதத்தை மேற்கொண்டால் என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.

எந்த ராசிக்காரர்கள் எந்த விரதம் மேற்கொண்டால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா? | Powerfull Vratham According 12 Zodiac Sign

எண் கணிதம்: 11, 12, 13, 14, 15 ஆகிய தேதியில் பிறந்தவர்களின் கவனத்திற்கு..

எண் கணிதம்: 11, 12, 13, 14, 15 ஆகிய தேதியில் பிறந்தவர்களின் கவனத்திற்கு..

12 ராசிகளுக்குரிய விரதங்களும் பலன்களும் :

மேஷம் - கந்தசஷ்டி விரதம் இருக்கும் பொழுது தொழிலில் சந்திக்கின்ற தடைகள் விலகும்.

ரிஷபம் - ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நிறைவேறும்.

மிதுனம் - பிரதோஷம் தினத்தன்று சிவபெருமானை வழிபாடு செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.

கடகம் - கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.

சிம்மம் - மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் பெறலாம்.

கன்னி - வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் கடன் தொல்லை விலகும்.

துலாம் - வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

விருச்சிகம் - கந்தசஷ்டி தினத்தன்று முருகனை பற்றிக்கொண்டால் வினைகள் விலகும்.

தனுசு - சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும்.

மகரம் - ஏகாதசி அன்று பெருமாளை வழிபாடு செய்தால் செளபாக்கியம் உண்டாகும்.

கும்பம் - பெளர்ணமி அன்று சிவபெருமானை வழிபாடு செய்து கிரிவலம் சென்றால் வருமானம் உயரும்.

மீனம் - விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை பற்றிக்கொண்டால் தடைகள் அகலும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US