சனி தோஷம் விலக புரட்டாசி சனிக்கிழமை அன்று நாம் செய்யவேண்டியவை
தர்மத்தின் தலைவனான பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் சனி பகவானின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.மேலும் சனி ஏற்படும் கஷ்டங்கள் படி படியாக குறையும் ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையல் வைத்து பெருமாளை வழிபடுகின்றனர். சனி பகவான் ஒருவருடைய கர்ம பலன்கள் எல்லாம் அழித்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு வகையான முன்னேற்றமே கொடுப்பார்.
ஆனால் அந்த முன்னேற்ற பாதைக்கு முன் நமக்கு பல வகையான பாடம் புகுட்டுவார் என்பது உண்மை. மேலும் சனிபகவான் கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையில் பிறந்தார். சனி பகவானை ஆயுள் காரகன் என்றும் சொல்லுவார்கள்.
இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே.எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாளாக நம்பப்படுகிறது.
ஆகையால் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமைகளும் பக்தர்கள் அனைவரும் பெருமாளை வழிபட்டால் சந்தான பாக்கியம், திருமண பாக்கியம் கிடைக்கும்.
மேலும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் பெருமாள் கோவில்களில் துலாபாரம் வழிபாடு நடைபெற்று வருகிறது.
மேலும் சனிக்கிழமையில் பெருமாளை பக்தர்கள் வழிபட்டால் அவர்களுக்கு பிடித்த சனி தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
ஆதலால் நீதி அரசரான பெருமாளை இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்து,நம்முடைய வாழக்கையை வளமாக்குவதோடு சனி பகவான் பாதிப்பில் இருந்து நம்மை காப்பற்றிக்கொள்ளுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |