பெருமாள் கோவிலில் கொடுக்கும் மந்திர விபூதியை பூசினால் தீராத நோய் தீருமாம்
பெருமாள் என்றாலே அவர் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தர்மத்தை நிலை நாட்டுபவர். அந்த வகையில், பக்தர்களை "வா" என அழைத்து அருளக்கூடிய சுந்தரராஜ பெருமாளாக சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் கோயில் கொண்டிருக்கிறார்.
இந்த கோயிலினுடைய விசேஷம் என்னவென்றால் இங்கு கொடுக்கக்கூடிய மந்திர விபூதியை பூசினால் தீராத வியாதிகளும் தீரும் என்பதே ஆகும்.

கவி கால ருத்ரர் என்ற புலவரின் கனவில் தோன்றிய பெருமாள் அடி எடுத்துக் கொடுத்து அவருக்கு பாடுவதற்கு அருள் புரிந்திருக்கிறார். இதன் அடிப்படையில் மன்னர் ஜடா வர்ம குலசேகரன் கோயிலை எழுப்பினார். பிறகு சுந்தரராஜப் பெருமாள் என சுவாமிக்கு திருநாமம் சூடப்பட்டது.
இங்கு பெருமாள் இடது கையால் பக்தர்களை "வா" என அழைத்து வலது கையால் அருள் புரிபவர் என பொருள். அதாவது இடது கை விரல்களை வளைத்து பக்தர்களை அருகில் அழைத்து வலது கையால் வரம் தருபவராக இங்கு நமக்கு காட்சி கொடுக்கிறார். பிறகு மேலிரு கைகளில் சங்கு சக்கரம் இருக்கிறது. அவருடைய மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்கிறார். பூமி தேதி நீலாதேவி அருகில் இருக்கிறார்கள்.

இந்த ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்யக்கூடியவர்களுக்கு வைகுண்ட தரிசனம் செய்த புண்ணியம் வந்து சேர்கிறது. அதனாலே, இந்த ஆலயத்திற்கு விண்ணகரம் என்று சொல்கின்றனர். இங்கு சுதர்சன சக்கரத்தை விபூதியில் வைத்து விஷ்ணு சகஸ்ரநாமம் சுதர்சன மந்திரங்களை ஜெபிக்கின்றனர்.
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமை திரு கார்த்திகை மற்றும் வைகுண்ட ஏகாதசியில் மிக சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் நிச்சயம் இங்கு வந்து வழிபாடு செய்ய அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |