புதனால் பண மழையில் நனையப்போகும் ராசிகள் யார் தெரியுமா?

12 Rasi Palangal Tamil
By Sakthi Raj Jun 22, 2024 09:30 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

புதன் ஒரு ராசியில் பயணம் செய்யும் பொழுது இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் சாதனைகள் , நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல், பெரியோர்களின் ஆசி போன்ற யாவும் அமையும். மத்திம வயதில் புதன் திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் கௌரவமான பதவிகளை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.

பேச்சுத்திறனால் சமுதாயத்தில் நல்ல கௌரவமும் உயர்வு போன்ற யாவும் உண்டாகும். புதன் பகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய 27 நாட்களில் எடுத்துக் கொள்கிறார்.

புதன் பகவான் தனது நிலைகளில் இருந்து மாற்றமடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். தற்போது புதன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார்.

புதன் ரிஷபத்தில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார்.புதன் பகவானின் அஸ்தமன பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அஸ்தமன நிலையில் கிரகங்கள் பயணம் செய்யும் பொழுது அவர்களுடைய பலம் குறைவாக இருக்கும்.

இந்நிலையில் புதன் பகவானின் ரிஷப ராசி அஸ்தமன பயணம் ஆனது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

புதனால் பண மழையில் நனையப்போகும் ராசிகள் யார் தெரியுமா? | Puthanal Pana Mazhai Yaruku Horoscope Rasi Palan

தனுசு

தனுசு ராசியில் ஆறாவது வீட்டில் புதன் மறைந்து உள்ளார்.இதனால் வாழ்க்கையில் தடை பட்டு இருந்த காரியங்கள் அனைத்தும் சரியாகும்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.பிள்ளைகள் ஆதவராக இருப்பார்கள்.வெளியூர் பயணம் நல்ல மாற்றங்களை தரும்.எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியை தரும்.மன குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்


விருச்சிகம்

விருச்சிக ராசியில் ஏழாம் வீட்டில் புதன் மறைந்து உள்ளார்.ஆதலால் குழந்தை இல்லாதவரக்ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த சிக்கல் விலகும்.புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை ஏற்படும்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும்.வாழ்க்கையில் இருந்த சிக்கல் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்க்கை வாழ வழி வகுப்பார் புதன் பகவான்.

கன்னி

கன்னி ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் மறைந்து இருக்கிறார்.நீண்ட நாள் விடை கிடைக்காத பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு உண்டாகும்.வேலை தொடர்பான வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து தற்போது முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US