நாளை(07-05-2025) முதல் புதாத்திய யோகம்- பண மழையில் குதிக்க போகும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் நவகிரகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் தங்கள் இடத்தை மாற்றுகிறார்கள். அந்த மாற்றத்தினால் 12 ராசிகளுக்கும் பல விதமான தாக்கம் உண்டாகிறது.
இந்த சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். மேலும், நவகிரகங்களின் இளவரசனாக இருக்கக்கூடியவர் புதன் பகவான். மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் புதாத்திய யோகம் உருவாகிறது. இதனால் 12 ராசிகளுக்கு பல விதமான மாற்றங்கள் உண்டாகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கும்பம்:
புதாத்திய யோகம் கும்ப ராசிக்கு மிக சிறந்த சாதகமான பலனை கொடுக்க இருக்கிறார். இவர்கள் வேலை செய்யும் இடத்தில் சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள். இந்த காலத்தில் இவர்களுக்கு திடீர் பண வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் சந்தித்த சிக்லகள் விலகி செல்லும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.
மகரம்:
புதாத்திய யோகம் மகர ராசிக்கு சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய போகிறது. வாழ்க்கை துணையோடு சேர்ந்து நல்ல நேரத்தை செலவு செய்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சந்தித்த மன பிரச்சனைகள் இவர்களை விட்டு அகலும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வருவதால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
புதாத்திய யோகம் துலாம் ராசிக்கு திருமண வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்க உள்ளது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். சிலருக்கு வியாபாரத்தில் கோடீஸ்வர யோகம் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் எல்லாம் விலகும். குடும்பத்தினர் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |