எந்த ஜாதகம் அமைப்பு கொண்டவர்களை பார்த்தால் எல்லோருக்கும் பயம் உண்டாகும்

By Sakthi Raj Jun 19, 2025 08:35 AM GMT
Report

 ஜோதிடத்தில் நாம் எதிர்காலம் பற்றியும் ஒரு நபரின் குணங்கள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, ஒரு சிலரை பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் ஒருவித பயம் உண்டாகும். அவர்களிடம் எளிதாக பழக இயலாது. அதே போல் ஒரு சிலரை பார்த்தால் மிகவும் மரியாதையான உணர்வு தோன்றும்.

இதற்கு அந்த நபரின் எண்ணங்களும் செயலும் ஒரு காரணம் என்றாலும் ஒருவரின் ஜாதக அமைப்பு கொண்டும் அவ்வாறான உணர்வுகள் தோன்றும். அறிமுகமே இல்லாத நபராக இருந்தாலும் சரி அவர்களை பார்த்தால் ஒருவித அச்சம் உண்டாகும்.

அவர்கள் ஜாதகத்தில் ராகு ஆதிக்கம் கொண்டவராக இருப்பார்கள். அதே, ஒருவரை பார்த்ததும் மரியாதை வருகிறது என்றால் அவர் குரு ஆதிக்கம் இருப்பார்கள். அதுவே ஒருவரை பார்த்து பயம் கலந்த மரியாதை வருகிறது என்றால் அவர் கேது ஆதிக்கம் கொண்டவராக இருப்பார்கள்.

எந்த ஜாதகம் அமைப்பு கொண்டவர்களை பார்த்தால் எல்லோருக்கும் பயம் உண்டாகும் | Raghu Kethu Guru Preditcion In Tamil 

1) ராகு ஆதிக்கம் – பயத்தை ஏற்படுத்தும் :

ஒருவர் முகத்தைப் பார்த்தவுடன் பயம் உண்டாகுகிறது என்றால் அந்த நபரின் ஆற்றல் பார்வை இவை எல்லாம் அமைதியின்மை தன்மை கொண்டதாக இருக்கும். இது ராகுவின் சாயலாகும். அதாவது ஜோதிடத்தில் ராகு என்பது மாயை, நுண்ணறிவு, உளவுத்திறன், வேதனை, அச்சம் ஆகியவற்றை இயக்கும் கிரகம் ஆகும். அதனால் இவை ஒரு வித பயத்தை உண்டு செய்கிறது.

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்

2) குரு ஆதிக்கம் – மரியாதையை ஏற்படுத்தும் :

அதே போல் ஒருசிலரை பார்த்தால் மிகப்பெரிய மரியாதை உண்டாகும். அந்த நபர் மிகவும் அமைதியான தன்மையுடனும் ஞானத்துடனும், தர்மத்துடன் கூடிய நபராகவும் இருப்பார்கள். அதாவது குரு என்பது ஞானம், நீதி, உயர்ந்த சிந்தனை, ஆழமான ஆன்மீக அடையாளம் ஆகியவற்றின் பிரதிநிதி. ஒருவர் ஜாதகத்தில் குரு ஆதிக்கம் பெற்று இருந்தால் அவர்கள் பார்த்தால் மிக பெரிய மரியாதையும் நம்பிக்கையும் தோன்றும்.

3) கேது ஆதிக்கம் – பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்தும் :

இன்னும் சிலரை பார்த்தால் பயம் கலந்த மரியாதையை உருவாக்கும். அவர்கள் ஜாதகத்தில் கட்டாயம் கேது ஆட்சியாக இருக்கும். ஜோதிடத்தில் கேது என்பது மௌனம், துறவு, அதீத ஆன்மீகத் தன்மை, கண்ணுக்கு தெரியாத ஆற்றல் போன்றவற்றை குறிக்கக்கூடியது. கேது ஆதிக்கம் கொண்டவர்கள் நம் அருகில் நாம் செய்யும் செயல்களை மிக சரியாக செய்கின்றோமா என்றபடி எச்சரிக்கையாக இருப்போம். இது கேதுவின் ஆழமான சக்தி ஆகும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US