ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செல்லவேண்டிய கோயில்கள்
பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் அவர்களுக்கு அது மிக பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் கொடுக்கும்.அதாவது அவர்கள் என்ன வேலை செய்தாலும் அதில் தடங்கல் தோல்வி சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலும்,இவர்களுக்கு திருமண வாழ்வில் அதிக பிரச்சனையை கொடுத்துவிடும்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள்,சண்டை பிரிவு போன்ற விஷயங்கள் உண்டாகும்.அப்படியாக அவர்கள் கட்டாயம் ராகு கேது தோஷ நிவர்த்தி ஆலயம் சென்று வழிபாடு செய்தால் மட்டுமே அவர்களுக்குரிய தடங்கல் விலகி மாற்றம் பெறமுடியும்.
அந்த வகையில் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் செல்லவேண்டிய கோயில்கள் பட்டியல் பற்றி பார்ப்போம்.
1.ராகுவும் கேதுவும் மனித உருவில் காட்சி அளிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ளது.இக்கோயிலின் பெயர் ஸ்ரீமாஹாளேஸ்வரர் திருக்கோயிலில்.
ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் இராகு காலத்தில் இக்கோயிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
2.புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேரையூர் எனும் ஊரில் மூலவர் நாகநாதர் அம்பாள் பிரகதாம்பாள் எழுந்தருளியுள்ளார்கள்.இக்கோயிலுக்கு சென்று அருள்மிகு நாகநாத சுவாமியை தரிசித்தால் இரண்டு கிரகங்களின் தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.
3.ராகு கேது தோஷம் விலக மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் காளஹஸ்தி.இது சென்னை திருப்பதி மார்க்கத்தில் அமைந்துள்ளது.இக்கோயில் ராகு கேது தோஷம் விலக கட்டாயம் செல்லவேண்டிய கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.
4.ராகுவும் கேதுவும் ஓருடலாக இணைந்து தனது நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்ட தலம் என்ற மிகுந்த சிறப்பை கொடு இருக்கிறது திருப்பாம்புரத்தில் அமைய பெற்ற வண்டார்பூங்குழலி சமேத பாம்புரேஸ்வரர் ஆலயம்.
இக்கோயில் மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
5.திருவாரூர் நாகை மார்க்கத்தில் கீழ்வேளுருக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் திருக்கண்ணங்குடி என்ற தலத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இது ஒரு இராகு கேது பரிகாரத் தலமாகும்.
6.மனித முகமும் பாம்பு உடலும் கொண்ட ஆதிசேஷனுக்கு தனி சன்னதி கொண்டு விளங்குகிறது பாமணி தலத்தில் சுயம்புலிங்கமாக அருள்கிற நாகநாதர் மற்றும் அமிர்தநாயக ஆலயம்.இத்தலத்தில் ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷம், இராகு கேது தோஷம் அகலும் என்பது ஐதீகம்.
7.கோயில் நகரமான கும்பகோணம் நகரத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரர் திருக்கோயில். இத்தலம் இராகு தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்து நாகேஸ்வர சுவாமியை வழிபட்டால் இராகு தோஷம் நீங்கப்பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |