கலியுகம் எப்பொழுது முடிவிற்கு வரும்?
கலியுகம் என்பது இந்து மதத்தில் நான்கு யுகங்களில் நான்காவது யுகமாகும்.இது குறுகிய மற்றும் மோசமான யுகமாகக் கருதப்படுகிறது. தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது.அதே போல் திருமாலின் 10 அவதாரங்களில் 10வது அவதாரம் கலியுக முடிவில் இறைவன் கல்கி அவதாரம் எடுப்பார் என்பது நம்பிக்கை.
அப்படியாக இந்த கலியுகம் எப்பொழுது நிறைவு பெரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.அதை பற்றி பார்ப்போம். அப்படியாக.அகிலத்திரட்டில் 16-வது நாள் திரு ஏடு வாசிப்பில், பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் கலி அழிவது எப்போது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதாவது கலியன் அவனை யாரும்,தோற்கடிக்க முடியாத அளவு அதீத சக்திகள் பெற்றுக்கொண்டு அவனுடைய பெண்ணான கலிச்சி என்பவளுடன் உலகத்திற்கு செல்கின்றான்.அவ்வேளையில் ரோம ரிஷி என்பர் சிவனிடம் கேட்கிறார்,ஈசனே!இந்த கலியன் இவ்வளவு பெரும் வரம் பெற்று செல்கின்றானே இதற்கு எப்பொழுது முடிவு பிறக்கும் என்று?
அதற்கு சிவபெருமான் மிக தெளிவாக ஆசானாக சாந்தமாக விளக்கம் அளிக்கிறார்.அதில் கலியன் காலம் முடிவு பெரும் பொழுது,மனிதனுக்கு மனிதனே எதிரிகளாக மாறுவார்கள்.இறை சிந்தனைக்கும் அதன் ஆற்றலும் செல்லாது போகும்.
பொய்யும்,களவும் நியாயமாகும்.மக்களை நல்வழி படுத்திய வேதங்களும் ஞானமும் வழி தெரியாமல் போகும்.நேர்மையை இழிவாக பார்ப்பார்கள்,அமைதி காப்பதற்கு பதிலாக போருக்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள்.
நிதானம் என்ற சொல்லே காணாமல் போயிவிடும்.இந்த மாற்றத்தின் விளைவாக கடல் அதன் கோபத்தை கக்கும்.மழை என்ற துளியை பார்ப்பதே அரிதாகி விடும்.வீசும் காற்றும் நோய்களுக்கு சொந்தமாகும்.நல்ல எண்ணம் கொண்டவர்களை கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அடக்கி ஆள்வார்கள்.
நீதி தோல்வி அடையும்.நாட்டை ஆள்பவர்கள் தர்மம் அற்ற செயல்கள் செய்வதில் குறிக்கோளாக இருப்பார்கள்.அந்த மோசமான நிலையில் தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள் என்று சொல்வதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |