2026 ராகு கேது பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது?

By Sakthi Raj Nov 26, 2026 11:13 AM GMT
Report

2026 ஆம் ஆண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த பெயர்ச்சி மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது என்று நம்மோடு ஜோதிட பலன்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட யோகி ஜெயப்பிரகாஷ் அவர்கள். அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலைகள் இவர்களுக்கு சாதகமாக அமையக்கூடிய காலகட்டம். இருப்பினும் உடல் நலம் மற்றும் உறவுகள் குழந்தைகள் உடைய கல்வி விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மற்றும் வழக்குகளில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையின் உடல் நலம் மற்றும் பெரியவர்களுடன் உறவில் மற்றும் நிதானம் கடைபிடிப்பது அவசியம்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சற்று சவாலாகவே அமையப்போகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஜூன் 2027 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த நிலைமை சற்று சீராக மாறும்.

2026 ராகு கேது பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது? | Rahu Ketu 2026 Predcitin For Aries To Virgo

பகவத் கிதை: தோல்வியைக் கண்டு பயமா? பகவான் கிருஷ்ணரின் சொல்லும் அறிவுரை

பகவத் கிதை: தோல்வியைக் கண்டு பயமா? பகவான் கிருஷ்ணரின் சொல்லும் அறிவுரை

கடகம் :

ஆன்மீகம் மற்றும் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பானதாக அமையப்போகிறது. அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிறந்த காலம் இருப்பினும் மன அமைதி மற்றும் கணவன் மனைவி இடையே கவனம் வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு அற்புதமான காலகட்டம். கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் சந்தித்து வந்த தடைகள் யாவும் விலகப் போகிறது. ஆரோக்கியம் மற்றும் தொழிலில் தனிப்பட்ட வாழ்க்கையில் மேன்மை அடைவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு முதல் ஏழு மாதங்கள் வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகள் மிகச் சிறப்பானதாக இருக்கும். குழந்தை பாக்கியம் மற்றும் காதல் உறவுகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் மற்றும் கவனம் வேண்டும்.

மேலும், மேஷம் முதல் கன்னி வரை ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.  


disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US