சதய நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... இந்த 3 ராசிகளுக்கு பணமழை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிழல் கிரகமான ராகுவின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது ராகு, 2026 மே 31ஆம் திகதி சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிரவேசித்துள்ளார்.

அவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை சதய நட்சத்திரத்திலேயே சஞ்சரிக்கவுள்ளார். சதய நட்சத்திரம் ராகுவின் சொந்த நட்சத்திரமாகக் கருதப்படுவதால், இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பான பலன்களை வழங்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக எந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியில் அதிக நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
மிதுனம்

இந்த காலகட்டம் மிதுன ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகலாம். நிதி நிலையைப் பொறுத்தவரை, புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்.
குழந்தைகள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் மனநிறைவை அளிக்கும். பல்வேறு வழிகளில் பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பும் காணப்படுகிறது.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராகு நட்சத்திர மாற்றம் மிகவும் சாதகமானதாக அமையக்கூடும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பரம்பரைச் சொத்துகள், பழைய முதலீடுகள் அல்லது நீண்டகால நிதித் திட்டங்கள் மூலம் லாபம் கிடைக்கலாம். வணிகத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்.
மேலும், மன அழுத்தம் குறைந்து, நீண்ட நாட்களாக இருந்து வந்த சில உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம்.புதிய முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வமும் அதிகரிக்கும்.
மீனம்

ராகுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் காணப்படலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகக்கூடும்.
தொழில், நிதி, குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு, மகிழ்ச்சியான அனுபவங்களை பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.